நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? தீயாய் பரவும் தகவல் .! உண்மை என்ன?

கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் தீயாக பரவிக் கொண்டிருக்கும் ஒரு தகவல் தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்த தகவல். மீனா விரைவில் தனது குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. தற்போது அதன் உண்மை தன்மை குறித்து மீனாவின் தரப்பே விளக்கம் அளித்து இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தற்போது வரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும், ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? தீயாய் பரவும் தகவல் .! உண்மை என்ன? 1

விளம்பரம்

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. நைனிகாவும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் படங்களின் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்ட மீனா, கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். அதன் பின்னர் எங்கும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவரது தோழிகள் தேற்றி தற்போது இயல்பு நிலைக்கு திருப்பி கொண்டிருக்கின்றனர. இந்த நிலையில் மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் இரண்டு நாட்களாக பரவிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அது குறித்து மீனாவின் நெருங்கிய வட்டாரத்தினர் விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றனர்.

தொடர்புடையவை  புதிய உலகசாதனை படைத்த CWC புகழ் மகள் ரிதான்யா...! அட குட்டி பாப்பா கலக்குறாங்களே..!

நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? தீயாய் பரவும் தகவல் .! உண்மை என்ன? 3

விளம்பரம்

மீனா அவரது குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள சம்மதித்து இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மீனாவிற்கு நெருங்கிய வட்டாரத்தினர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை, அவரது பெற்றோர்களும் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை. ஏற்கனவே கணவர் இறப்பால் வாடிக் கொண்டிருக்கும் மீனாவை இதுபோல வதந்திகளால் மேலும் காயப்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவல் குறித்து மீனா இது வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த செய்தி உண்மையில் வதந்தியா இல்லை உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

Leave a Comment