மௌன ராகம் சீரியலில் ஸ்ருதி கர்ப்பமாக இருப்பது போல் நாடகமாடிய விஷயத்தை தற்போது சக்தி கண்டுபிடித்துவிட்டார். விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் மௌன ராகம். இந்த சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. ஸ்ருதி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை சக்தி மாடியில் இருந்து தள்ளிவிட்டு அதனால் கர்ப்பம் கலைந்து விட்டதாகவும் நாடகமாடி வருகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் சக்திக்கு எதிராக இருக்கின்றனர். இன்றைய எபிசோடில் ஸ்ருதியை பார்ப்பதற்காக காதம்பரியும் அவரது தாய் ருக்மணியும் வருகின்றனர். அங்கு ஸ்ருதியின் அறையில் அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி, தான் சொன்ன பொய்யை அனைவரும் நம்பி விட்டதாக தாயிடமும் பாட்டியிடமும் கூறி சிரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பொய்யை நம்பி தருண், தன்னை தலையில் வைத்து தாங்குவதாகவும், இப்போதெல்லாம் எனக்கு சாப்பாடு என அறைக்கே வந்து விடுகிறது. தருண், சக்தி மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கிறார். இதை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் கேட்டு விடுகிறார். வெளியில் தரை துடைத்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண் அறையில் இவர்கள் பேசி அனைத்தையும் கேட்டுவிட்டு, சக்தியிடம் இந்த விஷயங்களை கூறுகிறார். இதன் பின்னர் சக்தி ஸ்ருதிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் சென்று பேசுகிறார். அப்போது அந்த மருத்துவர் ஸ்ருதி முதலில் கர்ப்பமாகவே இல்லை, அவருக்கு கரு கலையவும் இல்லை என்பதை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சக்தி நேராக வீட்டுக்கு வருகிறார்.
வீட்டுக்கு வரும் சக்தி ஸ்ருதியிடம் உன்னை எல்லாம் என் தங்கை என்று சொல்லவே கேவலமாக இருக்கிறது என்று அவரை திட்டுகிறார். அப்போது ஸ்ருதி நீ பொய் சொல்கிறாய் என்று சக்தியிடம் கூறுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்து வருண் கேட்டு விடுகிறார் இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the Below Video..
Youtube Video Code Embed Credits: Vijay Television