இப்படி அடுத்தவன் நிம்மதியை கெடுக்குறது எல்லாம் ஒரு பொழப்பா? ச்சீ.! வெளுத்து வாங்கும் சக்தி

மௌன ராகம் தொடரில் வருணுக்கு இருக்கும் நோயை வைத்துக் கொண்டு ஸ்ருதி மற்றும் அவரது குடும்பம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று காதம்பரியின் வீட்டிற்கு செல்லும் சக்தி காதம்பரியை நீ எதுவும் பேசாதே என்று கையை நீட்டி மிரட்டுகிறார். சக்தி தைரியமாக விஸ்வநாதன் மற்றும் காதம்பரியை மிரட்டும் ப.ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருக்கிறது மௌன ராகம். இந்த சீரியலின் கதாநாயகனுக்கு நெருப்பை பார்த்தாலே பயம ஏற்படும். சிறு வயதாக இருக்கும் போது தனது தாய் நெருப்பு பிடித்து இறந்து விட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் வருண். ஆனால் அவரின் தாயை வருணின் அத்தை இத்தனை ஆண்டு காலமாக கடத்தி வைத்திருக்கிறார். தற்போது வருணின் தாயை மீட்டு மீண்டும் வருண் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி அடுத்தவன் நிம்மதியை கெடுக்குறது எல்லாம் ஒரு பொழப்பா? ச்சீ.! வெளுத்து வாங்கும் சக்தி 1
ஆனாலும் வருணுக்கு மீண்டும் அந்த மன நோய் வந்திருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் சக்தி தனது இசைப்பள்ளியில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருப்பார். அதில் பேனரில் சக்தியின் புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்தை விஸ்வநாதன் திட்டம் தீட்டி ஒரு பெண்ணை வைத்து எரிக்க வைத்து விடுவார். அதில் சக்தியின் உருவம் எரிவதை பார்த்த வருண் தன் மனைவியும் தன் தாய் போல் தீப்பிடித்து எறிந்து விடுவாரோ என்ற பயத்திலேயே அவருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இத்தனை நாள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது வீட்டிற்கு திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்து அவர், அம்மாவை பார்த்த பின்பு அவருக்கு இந்த நோய் சரியாகும் என்று அனைவரும் எண்ணி இருந்த நிலையில், அவருக்கு நோயின் தீவிரம் குறையவில்லை. ஆனால் சக்தியோ பேனருக்கு நெருப்பு வைத்தது யார் என்பதை கண்டுபிடித்து விட்டார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சீசன் 6ல் முதல் எலிமினேஷன்.! பெண் போட்டியாளரை வீட்டை விட்டு அனுப்பிய பிக்பாஸ்.!

இப்படி அடுத்தவன் நிம்மதியை கெடுக்குறது எல்லாம் ஒரு பொழப்பா? ச்சீ.! வெளுத்து வாங்கும் சக்தி 3
சக்தி நடத்தி வரும் இசைப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை வைத்து தான் அந்த பேனரை விஸ்வநாதன் எரித்து இருப்பார். அதை சிசிடிவி கேமரா வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்ட சக்தி தற்போது நேராக விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று சண்டை இடுகிறார். மேலும் ஏற்கனவே வருணை கொலை செய்ய வைக்கோலில் நெருப்பு வைத்ததையும் மனோகரிடம் சொல்லி விடுகிறார் சக்தி. அப்போது காதம்பரி சக்தியை ஏய் நீ எல்லாம் பேசக்கூடாது என்று சொல்ல, சக்தி பதிலுக்கு கையை நீட்டி நீங்க எல்லாம் பேசக்கூடாது என்று கோபத்தில் கத்துகிறார். சக்தி இது போல தைரியமாக இருக்க வேண்டும் ஆனால் அவருக்கு தொடர்ந்து இதுபோன்ற தீய செயல்களையே விஸ்வநாதன் குடும்பம் செய்து வருகிறது. இதற்கு ஒரு எண்டே இல்லையா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment