வருணுக்காக நெருப்பில் இறங்கிய சக்தி.! உயிரை பணயம் வைத்து சக்தி எடுத்த அதிரடி முடிவு .!

மௌன ராகம் சீரியலில் இந்த வார ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சக்தி தனது கணவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற காரணத்திற்காக தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார். மௌன ராகம் சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் கதாநாயகன் வருணுக்கு தனது தாயார் தீவிபத்தில் இறந்து விட்டதாக நினைத்து மனநோய் இருக்கிறது. தீயை பார்த்தாலே அவர் பயந்து அலறி மயங்கி விழுந்து விடுவார். அந்த அளவிற்கு நெருப்பின் மீது அவருக்கு பயம் இருக்கிறது. இந்த நிலையில் அவரது மனைவி சக்தியின் இசைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பேனர் எரிவதை கண்ட அவர் தனது தாயார் போல் சக்தியும் எரிந்து விடுவாரோ என்ற பயத்தில் அலறி துடித்துக் கொண்டிருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே தனது தாய் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மீண்டும் உயிருடன் வந்து விட்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வருணுக்காக நெருப்பில் இறங்கிய சக்தி.! உயிரை பணயம் வைத்து சக்தி எடுத்த அதிரடி முடிவு .! 1
தனது தாயைப் பார்த்த பின்பு வருண் மனநிலை சரியாகும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது. சக்தியை பார்த்தால் மட்டுமே அவர் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார். வருண் அம்மாவுக்கும் இவ்வளவு நாள் நினைவு சரியில்லாமல் இருக்கும் நிலையில், அவருக்கும் நினைவுத்திரும்பி மகனிடம் சென்று என்னை பார், என்னிடம் பேசு என்று அழுது புலம்பி கொண்டிருக்கிறார். ஆனால் வருணுக்கு அனைத்துமே மறந்து விட்டது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று சக்தி முடிவு எடுத்து, தங்களது வீட்டாரிடம் ஒரு யோசனையை சொல்கிறார். 15 வருடங்களுக்கு முன்பு எப்படி தீ விபத்து ஏற்பட்டு அவர் அம்மா இறக்கவில்லை என்று அந்த காட்சியை மீண்டும் நினைவு படுத்தினால் வருணுக்கு நினைவு சரியாகும் என்று சக்தி வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் கார்த்தி வீட்டுக்கு வந்த காதம்பரி.! சம்பவம் செய்துவிட்ட மல்லிகா.! பங்கம் பண்ணிடீங்க.!

வருணுக்காக நெருப்பில் இறங்கிய சக்தி.! உயிரை பணயம் வைத்து சக்தி எடுத்த அதிரடி முடிவு .! 3
ஆனால் இது தவறான முடிவு. இதை செய்ய வேண்டாம் என்று சக்தியின் மாமனார் மறுக்கிறார். ஆனால் இதை செய்து காட்டுவேன் என்று சொல்லி கோவிலில் வைத்து தீ மூட்டி அதற்கு நடுவில் நிற்கிறார் சக்தி. வருண் சரியாக வேண்டும் என்கிற காரணத்திற்காக தன் உயிரை பணயம் வைக்கிறார் சக்தி. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த புரோமோவை காண, கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment