அத்தையை கடத்தி வச்சி இருந்தது ஷீலா தான்..! உண்மைகளை போட்டு உடைத்த சக்தி.! வேற லெவல் ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடர் தற்போது முன்னிலையில் இருக்கக்கூடிய ஒரு தொடராக இருக்கிறது. இதன் முதல் பாகம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் இந்த நாடகத்தின் இரண்டாவது பாகத்தை மக்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அதேபோல இதன் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வருண்- சக்தி, தருண்-ஸ்ருதி என ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் வருணின் தாயார் இறந்துவிட்டதாக கதை சென்று கொண்டிருந்த நிலையில், அதிரடி திருப்பமாக அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றும், வருணனின் அத்தை ஷீலா தான் அவரை இவ்வளவு நாள் கடத்தி வைத்திருந்ததாகவும் கதையை திருப்பி இருந்தனர். இது மக்களிடத்தில் சுவாரசியத்தை இன்னும் அதிகமாக்கியது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தையை கடத்தி வச்சி இருந்தது ஷீலா தான்..! உண்மைகளை போட்டு உடைத்த சக்தி.! வேற லெவல் ப்ரோமோ 1

மெகா சீரியல் என்றாலே அனைத்து இயக்குனர்களும் ஒரு கதையை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போவார்கள். மேலும் ஏதாவது ஒரு திருப்பம் என்றால் அதை ஒரு மாதத்திற்கு வைத்து ஓட்டி விடுவார்கள். ஆனால் மௌனராகம் தொடர் அப்படி இல்லை. ஏதாவது ஒரு திருப்பம் என்றால் அதை உடனே உடைத்து விட்டு, அடுத்த கட்டத்திற்கு கதையை நகர்த்தி சென்று விடுவார்கள். அதுதான் இந்த நாடகத்தின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்த நாடகத்தில் தன் தாயார் தீ விபத்தில் இறந்துவிட்டார் என்று சொல்லி வருணுக்கு நெருப்பை பார்த்தாலே பயம் இருக்கிறது. இதை தற்போது சக்தி குணப்படுத்தி இருக்கிறார். இதற்கிடையே இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த வருணின் தாயாரும் உயிருடன் மீண்டும் திரும்பி வந்துவிட்டார். தற்போது இருவருக்கும் பழைய நினைவுகள் திரும்பி மகனும் தாயும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர். இதற்காக சக்தியை பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்.


தற்போது வருணின் தாயை இவ்வளவு நாள் யார் கடத்தி வைத்திருந்தார்கள் என்பது குறித்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. வருண் தனது தாயாரிடம் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் என்று கேட்கிறான். அப்போது ஒரு வீட்டில் என்று அவர் பதில் சொல்ல, இதனால் ஸ்ருதி பயந்து வெளியில் செல்கிறார். அவளை பின்தொடர்கிறார் சக்தி. அப்போது ஸ்ருதி அவரது பாட்டி ருக்மணி மற்றும் ஷீலா ஆகியோர் பேசுவதை கேட்டு விடுகிறார். பின்னர் வீட்டிற்கு வந்து அனைவரிடத்திலும் அத்தையை இத்தனை நாள் கடத்தி வைத்திருந்தது ஷீலா தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்சக தி. இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்தது ஸ்ருதி தான் என்பது தெரிய வந்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video.!

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்