நடுரோட்டில் வைத்து பி.ஏ-வை வெளுத்து கட்டிய முத்து..! தரமான சம்பவம் பண்ணீங்க முத்து.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் காரில் அமர்ந்து கொண்டு பெண்களைப் பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கும் பி ஏ வை தற்போது முத்து அடித்து உதைக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடுரோட்டில் வைத்து பி.ஏ-வை வெளுத்து கட்டிய முத்து..! தரமான சம்பவம் பண்ணீங்க முத்து.! 1

விளம்பரம்

ரோகிணியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று பி.ஏ காரில் ஏறி வந்து கொண்டிருக்கிறார். அந்த காரை முத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். முத்துவுக்கும் பி.ஏ யார் என்பது தெரியாது. பி.ஏவுக்கும் முத்து யார் என்பது தெரியாது. இதனால் போனில் தனது நண்பர்களுடன் ரோகிணி பற்றி தவறாக பேசிக்கொண்டு வருகிறார் பி.ஏ.

நான் ரோகினியை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு விடுவேன். பின்னர் நீங்கள் எல்லோரும் வந்து ரோகிணியுடன் உல்லாசம் அனுபவிக்கலாம். அதற்கு நான் எந்த தடையும் விதிக்க மாட்டேன். திருமணத்திற்கு பின்னர் அவள் யாருடன் எங்கு சென்றால் எனக்கென்ன? என் வாழ்க்கையை கெடுத்த ரோகிணியின் வாழ்க்கையை நான் கண்டிப்பாக கெடுப்பேன் என்று பேசிக்கொண்டு வருகிறார். அவரின் இந்த பேச்சை கேட்ட முத்து தற்போது கோபத்தில் கொந்தளிக்கிறார். திடீரென சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தும் முத்து காரில் இருந்து பி.ஏவை கீழே இறங்குமாறு கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மைனாவும் ஜனனியும் சேர்ந்து ஆடிய அழகிய நடனம்.! ரெண்டு பேரும் செம்ம Cute ஆ ஆடுறாங்களே.!

நடுரோட்டில் வைத்து பி.ஏ-வை வெளுத்து கட்டிய முத்து..! தரமான சம்பவம் பண்ணீங்க முத்து.! 3

கீழே இறங்கியவுடன் ஒரு பெண்ணை பற்றி பேச உனக்கு எப்படி இவ்வளவு மனம் வந்தது? பெண் என்றால் தப்பாக பேசுவியா என்று சொல்லி பி ஏ வை அடித்து துவைக்கிறார். அதற்கு நீ யார் இதையெல்லாம் கேட்க என்பதற்கு ஒரு அப்பனுக்கு பிறந்த யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றி தப்பாக பேசினால் கோபம் வரும் என்று சொல்லி பி.ஏ வை அடித்து உதைக்கிறார்.

விளம்பரம்

பெண்கள் என்றால் உனக்கு கேவலமாக போய்விட்டதா? நீ பெரிய மைனரா நீ? கூப்பிட்ட உடனேயே எல்லா பெண்களும் வந்து விடுவார்களா? ஒரு பொம்பளை வயிற்றில் தானே நீயும் பிறந்தாய் என்று சொல்லி பி.ஏவை வெளுத்து கட்டுகிறார் முத்து. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment