விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாடகம் என்று சொன்னால் அது மௌன ராகம் தான். சிறு வயதாக இருக்கும் போதே தனது தந்தையை பிரிந்து வாழும் ஒரு சிறுமியின் கதை. தனது தந்தையை தேடி சென்னைக்கு வந்து, தன் தந்தை வீட்டிலேயே தஞ்சமடைந்து, அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை தெரிந்து கொண்டு, அந்தக் குடும்பம் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு, அமைதியாக வாழும் ஒரு சிறுமியின் கதையாக மௌன ராகம் சீசன் 1 இருந்தது. சீசன் 1ல் சக்தியாக நடித்த அந்த சிறுமி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இதனால் இந்த நாடகத்திற்கு மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு இருந்தது. கீழே உள்ள ப்ரோமாவை பார்க்கவும்.

இதை அடுத்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிப்பு வந்த போது மௌன ராகம் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாக இருந்தனர். சிறு வயதாக இருந்த சக்தியும், ஸ்ருதியும் வளர்ந்து வருண், தருண் என்கிற அண்ணன் தம்பி இருவர்களை திருமணம் செய்து ஒன்றாக வாழ்கிறார்களா? இல்லையா என்பது போன்ற கதை. தற்போது சக்தி அவரது அம்மா வீட்டிற்கு வந்து விட்டார். அவரை தேடி வந்த வருணை சக்தியின் மாமா, நீங்கள் சக்தியுடன் பாட்டு பாடி அதில் ஜெயித்தால் தான் உங்களை சக்தியுடன் சேர்த்து வைப்பேன் என்று கூறி விடுகிறார். இதனால் பாடுவதற்கு மிக கஷ்டப்பட்டு கொண்டிருந்த வருணுக்கு சக்தியின் தந்தை கார்த்திக் பாட்டு சொல்லிக் கொடுப்பதற்காக தாண்டிக்குடி ஊருக்கு வருகிறார்.
அதில் சக்தியும் வருணும் நன்றாக பாடி முடிக்கின்றனர். அவரது மாமாவும் சமாதானம் ஆகிவிட்டார். இந்த நிலையில் சக்தியை கொல்வதற்காக ஸ்ருதியின் பாட்டி ஒரு ஆளை அனுப்பி இருக்கிறார். அவர் சக்தியை கொல்வதற்காக வரும்போது இடையில் கார்த்திக் விழுந்து தனக்கு கத்தி குத்து வாங்கிக் கொள்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பலரின் முன்னிலையில் முதன் முதலில் சக்தி அவரை அப்பா என்று அழைக்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு அப்படியே கார்த்திக் சார் கண்ணை மூடுகிறார். இத்துடன் இந்த புரோமோ முடிகிறது. கார்த்திக் சாருக்கு உடல்நிலை சரியாகுமா? இல்லை அவரது கதாபாத்திரத்தை முடிக்கிறார்களா? என்பது தெரியவில்லை எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ள அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television