மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் குறித்து வீடியோ ஒன்று இன்று மாலை வெளியாகும் என அறிவித்து இருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தனர். 5 பாகங்களாக வெளிவந்த அந்த நாவலை படமாக்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. எம்ஜிஆர் கூட இந்த முயற்சியில் இறங்கி, பின்னர் அது தோல்வியில் முடிந்து படத்தை பாதியிலேயே கைவிட்டார். தற்போது இந்த படத்தை மணிரத்தினம் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜூலை 8 அன்று படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. வெளியான 5 நாட்களில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த பலரும் பங்கேற்று இருந்தனர். ஆனால் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் மற்றும் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பலரும் அவருக்கு நெஞ்சுவலி என்று கிளப்பி விட அதையெல்லாம் விக்ரம் தரப்பு மறுத்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் பொன்னியின் செல்வன் டீசரில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே விக்ரமை மையப்படுத்திய ஒரு சிறிய வீடியோ அல்லது ஒரு கிலிம்ப்ஸ் வீடியோ ஏதாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விக்ரமிற்கும் மனிரத்னத்திற்கும் ஏதோ மனக்கசப்பு என்றும், அதனால் தான் அவர் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே கலந்து கொண்டார் என்றும் சில தரப்பினர் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் அதில் எதுவுமே உண்மையில்லை. பொன்னியின் செல்வன் டீசர் வெளியான போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், கோப்ரா இசை வெளியீட்டின் போது அவர் வீடு திரும்பியிருந்தார் அதனாலேயே அவர் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருந்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

நேற்று லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சோழ புலி என்று விக்ரம் படத்துடன் கூடிய ஒரு போஸ்டரை அறிமுகப்படுத்தி இருந்தது. நாளை மாலை 5 மணிக்கு அறிவிப்பு வரும் என்று போஸ்டரில் கூறியிருந்தார்கள். அதன்படி தற்போது விக்ரம் பற்றிய ஒரு சிறு காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியை நீங்களும் காண..
Our Chola Tiger Roars – in 5 tongues!#PS1Teaser #PonniyinSelvanTeaser #PonniyinSelvan#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman #Vikram @Tipsofficial pic.twitter.com/0cIEQIIrUU
— Lyca Productions (@LycaProductions) July 13, 2022