நான் கார்த்திக் கிருஷ்ணாவுக்கு பொறந்த பொண்ணு இல்லையா? உண்மைகளை தெரிந்து கொண்ட ஸ்ருதி.!

வெளியிட்டது

மௌன ராகம் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ஸ்ருதி கார்த்திக்கு பிறந்த குழந்தையே இல்லை என்கிற உண்மையை சொர்ணம் போட்டு உடைத்து விடுகிறார். மேலும் அவரிடம் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டையும் கொடுத்து விடுகிறார் சொர்ணம். இதனால் தற்போது மௌனராகம் தொடரில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மௌன ராகம் சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது மௌன ராகம் சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. இதில் ஹீரோ கார்த்திக் கிருஷ்ணாவிற்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். மூத்த மனைவி மல்லிகா அவருக்கு பிறந்த மகள் சக்தி. இரண்டாவது மனைவி காதம்பரி, அவருக்கு பிறந்த மகள் தான் ஸ்ருதி. இதில் இரண்டாவது மனைவி காதம்பரி திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் ஏற்பட்ட உறவால் பிறந்த குழந்தைதான் ஸ்ருதி. ஆனால் இந்த உண்மையை மறைத்து கார்த்திக்கிற்கு பிறந்த குழந்தைதான் ஸ்ருதி என்று இத்தனை நாள் காதம்பரி ஏமாற்றி வருகிறார். இந்த உண்மை ஒரு கட்டத்தில் காதம்பரியின் காதலரால் கார்த்திக்கிற்கு தெரிய வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் கார்த்திக் கிருஷ்ணாவுக்கு பொறந்த பொண்ணு இல்லையா? உண்மைகளை தெரிந்து கொண்ட ஸ்ருதி.! 1
ஆனால் இதை பல நாட்களாக கார்த்திக் நம்பவில்லை. ஸ்ருதி தனக்கு பிறந்த மகள் தான் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் கார்த்தி இடம் சேரும் முதல் மனைவி மல்லிகா மற்றும் சக்தியை காதம்பரியும் அவரின் குடும்பமும் ஸ்ருதியும் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஒருநாள் கார்த்தி கிருஷ்ணாவின் அறைக்கு செல்லும் சக்தியின் அத்தை சொர்ணத்திற்கு ஸ்ருதி கார்த்திக்கு பிறந்த மகளே இல்லை என்கிற உண்மை தெரிய வருகிறது. அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை அவர் எடுத்து பார்த்து விடுகிறார். இந்த நிலையில் மௌன ராகம் தொடர் முடிவடையும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ அதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது. சொர்ணத்துடன் பேசிக் கொண்டிருக்கும் ஸ்ருதி சக்தி, கார்த்திக்கு பிறந்த குழந்தையே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு கோபமடைந்த சொர்ணம் நீதான் கார்த்திக்கிற்கு பிறந்த குழந்தை இல்லை என்று கத்துகிறார்.

மேலும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை ஸ்ருதியிடம் கொடுக்கிறார் சொர்ணம். அதை பார்த்த பின்பு அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் ஸ்ருதி. மேலும் உள்ளே வீட்டிற்கு உள்ளே செல்லும் அவர் காதம்பரி மற்றும் அவரது தாய் ருக்மணியிடம் நான் கார்த்திக்கு பிறந்த குழந்தையை இல்லையா என்று கேட்கிறார். இதனால் காதம்பரியும் ருக்மணியும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். இந்த உண்மை தெரிந்த பிறகு ஸ்ருதி மனம் மாறுவார் என்று தெரிகிறது.அத்துடன் மௌனராகம் தொடரும் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்