நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த ட்ரெய்லரை பார்த்து ரசித்து இருக்கின்றனர். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை தொடங்கி இன்று தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படத்திற்கு பின்னர் இவர் பலராலும் அறியப்பட்ட நடிகையாக இருக்கிறார். தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இறுதியாக இவர் ரன் பேபி ரன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது கைவசம் இரண்டு மலையாள படங்களிலும், நான்கு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் சொப்பன சுந்தரி. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை லாக்கப் படத்தின் இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கியிருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து பிரபல சின்னத்திரை நடிகை தீபா ஷங்கர், மைம் கோபி, ரெட்டிங் கிங்க்ஸ்லி, கருணாகரன், நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா ஆகிய இருவர் இணைந்து இசை அமைத்திருக்கின்றனர் இந்தப் படத்தில் இருந்து சமீப காலமாக பாடல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. ஒரு கார் வாங்க போராடும் ஒரு பெண்மணியாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது தாயாக தீபாசங்கரும் காமெடியில் கலக்கி இருக்கின்றனர்.

தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்த படம் திரையில் வெளியாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலரை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Think Music India