விஸ்வநாதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய சொர்ணம்.! மல்லிகா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா?

மௌன ராகம் சீரியலில் காதம்பரியின் தந்தை விஸ்வநாதன் சக்தியின் தாயை கடத்தி வைத்திருக்கிறார். அந்த இடத்தை கண்டுபிடிப்பதற்கு சக்தியும் அவரது அத்தை சொர்ணமும் சேர்ந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர். அது தற்போது கை கூடி இருக்கிறது. சீரியலில் கார்த்திக் ஒரு பிரபல பாடகராக இருக்கிறார். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மல்லிகா. அவருடைய குழந்தை சக்தி. இரண்டாவது மனைவி காதம்பரி, அவருடைய குழந்தை ஸ்ருதி. இதில் திருப்பம் என்னவென்றால் காதம்பரி ஏற்கனவே ஒரு காதலருடன் நெருங்கி பழகியதால், அவர் கர்ப்பமாக இருந்திருப்பார். அதை மறைத்து கார்த்திகை திருமணம் செய்திருப்பார். இதனால் சுருதி கார்த்திக்கின் குழந்தையே இல்லை என்ற உண்மை டி என் ஏ டெஸ்ட் மூலமாக கார்த்திக்குக்கு தெரிய வந்தது.

விஸ்வநாதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய சொர்ணம்.! மல்லிகா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா? 1

விளம்பரம்

ஆனால் இந்த விஷயம் யாருக்குமே தெரியாது. டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை கார்த்திக் தன்னுடைய அறையில் பீரோவில் ஒளித்து வைத்திருப்பார். இதை எப்படியோ சக்தியின் அத்தை சொர்ணம் கண்டுபிடித்து விடுகிறார். ஸ்ருதி கார்த்திக்கின் மகள் இல்லை என்ற உண்மை கார்த்திக், மல்லிகா, சக்தி ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும். ஆனால் தற்போது சொர்ணத்திற்கும் தெரியவந்து விடுகிறது. இதனால் சொர்ணம் அடிக்கடி காதம்பரியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை விஸ்வநாதனை மிரட்டி பணத்தை வாங்கி வருகிறார். தற்போது மல்லிகாவை விஸ்வநாதன் கடத்தி வைத்திருப்பதால் மீண்டும் அந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு காதம்பரியின் வீட்டிற்கு செல்கிறார் சொர்ணம். சொர்ணத்தை பார்த்த விஸ்வநாதன் பயந்து நடுங்குவதை மாடியிலிருந்து ஷீலா பார்த்து விடுகிறார்.

தொடர்புடையவை  ஜீவானந்தம் மனைவியை கொன்றது குணசேகரன் என்கிற உண்மையை கண்டுபிடித்த கெளதம்

விஸ்வநாதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய சொர்ணம்.! மல்லிகா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா? 3

விளம்பரம்

சக்தியின் கணவரின் அத்தையான ஷீலாவை அந்த வீட்டிலிருந்து துரத்தி விட்டதால் அவர் காதம்பரியுடன் கைகோர்த்து சதி திட்டங்களை தீட்டி வருகிறார். ஷீலாவிற்கே தற்போது காதம்பரி மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டங்களை பார்த்து பயம் வருகிறது. மேலும் தற்போது விஸ்வநாதன் சொர்ணத்தை பார்த்து பயப்படுவதால், சொர்ணத்தை அழைத்து ஏன் விஸ்வநாதன் உன்னை பார்த்து பயப்படுகிறார் என்று கேட்கிறார் ஷீலா. அதற்கு சொர்ணம் அந்த உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் மல்லிகா இருக்கும் இடத்திற்கு என்னை கூட்டிச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அதை ஒப்புக்கொண்ட ஷீலா சொர்ணத்தை அழைத்துச் செல்கிறார். அவரது காரை பின்பற்றி சக்தியும் வருணும் செல்கிறார்கள். மல்லிகாவின் இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்பார்கள் என்று தெரிகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment