பல பேரால் விரும்பி பார்க்கப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது விஜய் டிவியின் முக்கியமான தொடரான “மௌன ராகம்” தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ரவீணா கோமாளியாக கலந்து கொள்ள இருக்கும் செய்தியை அவரே தற்போது பகிர்ந்து இருக்கிறார். இதனால் அவர் “மௌளனராகம்” சீரியலில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார். விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய இரண்டு இடங்களை வகிக்கும் நிகழ்ச்சிகள்தான் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தான் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றது விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கோடி கணக்கை தாண்டுவதை வழக்கமாக இருக்கிறது. இதில் தற்போது பிக்பாஸ் ஆறு சீசன்களை முடிக்க இருக்கிறது. குக் வித் கோமாளி மூன்று சீசன்ங்களை முடித்து இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 வருகிற ஜனவரி 28ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு பெரிய அளவில் கொண்டு போக முடியும் என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தான் முடியும். கோமாளி என்கிற ஒரு சேட்டைகள் நிறைந்த உதவியாளரை வைத்துக்கொண்டு சமைப்பவர்கள் எவ்வாறு திறமையுடன் சமைத்து அசத்துகிறார்கள் என்பதை கான்செப்டாக வைத்துக்கொண்டு வெற்றிகரமாக மூன்று சீசன்களை நடத்தி முடித்து இருக்கிறது. கொரோனா காலகட்டங்களில் இந்த நிகழ்ச்சி பலருக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆகவும் இருந்திருக்கிறது. பிக்பாஸ் முடிந்த உடனேயே குக் வித் கோமாளி சீசன் 4 ஆரம்பிக்க விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி ஜனவரி 24ஆம் தேதி உடன் பிக்பாஸ் முடியும் நிலையில் 28ஆம் தேதியிலிருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கிறது விஜய் டிவி. இதில் போன முறை இருந்த பல கோமாளிகள் மாற்றப்பட்டு தற்போது புது கோமாளிகள் உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, ஓட்டேரி சிவா, ரவீணா தாஹா போன்ற சிலரின் பெயர்கள் மட்டுமே அடிபட்டுள்ளது. இதில் தற்போது ரவீணா மௌன ராகம் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்துக் கொண்டிருந்த ரோஷினி இந்த நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து விலகி இருந்தார். அதேபோல ரவீணாவும் விலகுவார் என்று இணையத்தில் வேகமாக தகவல் வெளியானது. ஆனால் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் அது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O