வாத்தி படத்தின் 2nd சிங்கிள் “நாடோடி மன்னன்” வெளியானது.! தனுஷ் டான்ஸ் வேற லெவல்.!

தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் “நாடோடி மன்னன்” தற்போது வெளியாக இருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படம் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தனுஷின் 39 வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. மேலும் படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாத்தி படத்தின் 2nd சிங்கிள் "நாடோடி மன்னன்" வெளியானது.! தனுஷ் டான்ஸ் வேற லெவல்.! 1

விளம்பரம்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வசூலை வாரி குவித்திருந்தது. தொடர்ந்து வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான வா வாத்தி என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்தப் பாடலை தமிழில் தனுஷ் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் பாடலை தனுஷ் பாட ஜிவி பிரகாஷ் இசையமைப்பது போன்ற ஒரு வீடியோவை ஜிவி பிரகாஷ் வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். படத்தில் நடிகர் தனுஷ் பள்ளி வாத்தியாராக நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடையவை  தெலுங்கு ரீமேக் ஆகும் நட்பே துணை! ஆதி கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷண்!!

வாத்தி படத்தின் 2nd சிங்கிள் "நாடோடி மன்னன்" வெளியானது.! தனுஷ் டான்ஸ் வேற லெவல்.! 3

விளம்பரம்

படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவே ஆகும். படத்திற்கான பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான “வா வாத்தி” வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடலாக நாடோடி மன்னன் என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. அந்த பாடலை நீங்களும் பார்க்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below Video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Aditya Music Tamil

விளம்பரம்

Leave a Comment