சில காலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நெப்போல்டிம் என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெப்போடிசம் என்றால் ஒருவருக்கு சாதகமாக மற்றொருவரை தாழ்த்துவது என்று பொருள் கொள்ளலாம். அந்த வகையில் சின்ன திரையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடித்து வந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒருவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியை பற்றி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஜீ தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் தான் செம்பருத்தி. இது விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலை காப்பி அடித்து எடுக்கப்பட்டது என்று அப்போதே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ராஜா ராணி சீரியலில் வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்கார பெண்ணான செம்பாவை வீட்டின் உரிமையாளர் கார்த்தி காதலித்து திருமணம் செய்து கொள்வார். இதை அப்படியே காப்பி அடித்து இதன் போட்டி சேனலான ஜீ தமிழ் செம்பருத்தி என்ற நாடகத்தை ஒளிபரப்பியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த கதை கதாநாயகன் கார்த்திக்கின் விலகலுக்கு பின்னர் சற்று சுணக்கத்தை கொடுத்தது. கதையை நகர்த்த தெரியாமல் பூஜை, பரிகாரம், பழிவாங்கல் படலம் என்று ஏதேதோ காட்டிக் கொண்டிருந்தனர். ஐந்து வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருந்த இந்த கதையை பலரும் பார்ப்பதை நிறுத்திவிட்டனர். இதனால் கதாநாயகி சபானாவும் இந்த சீரியலை விட்டு விலகி வேறு சீரியலில் கமிட்டாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே இந்த சீரியலை அவசர அவசரமாக முடித்து நன்றி சுபம் போட்டு விட்டனர் சீரியல் குழு. சீரியல் முடிந்த பின்பு வெற்றி கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தியது இந்த டீம், அதில் சீரியலின் நடித்த அனைவரையும் கௌரவப்படுத்தி விருதுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் இதில் வில்லியாக நடித்த மோனிகாவுக்கு மட்டும் எந்த விருதும் கொடுக்காமல் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் தெரிவித்து இருந்தார்.
இப்போது பேட்டி ஒன்றை கொடுத்துள்ள அவர், என்னை மேடையிலேயே வைத்து விருது கொடுக்காமல் அசிங்கப்படுத்தியதாகவும், பெயருக்கு கூட்டத்தோடு கூட்டமாக ஒரு விருதை கொடுத்ததாகவும், அதை தான் மேடையிலேயே வைத்து ஐந்து வருடமாக உழைத்த எனக்கு ஏன் உரிய மரியாதை செய்யவில்லை என்று அனைவரும் முன்பாகவும் கேட்டு விட்டதாகவும், ஆனால் அதை சேனல் ஒளிபரப்பாமல் செய்து விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் செம்பருத்தி சீரியலில் வேலை இல்லாத காரணத்தால், தான் வேறு சேனலுக்கு சென்றபோது நீங்கள் அவ்வாறு செல்லக்கூடாது என்று தன்னை கட்டாயப்படுத்தி அந்த சீரியலிலும் வாய்ப்பு கிடைக்காமல் செம்பருத்தி சீரியலிலும் நாட்கள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும் தான் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக உடைகளை கூட தன் சொந்த செலவில் வாங்கி நாடகத்தில் நடித்ததாகவும், எனக்கு இந்த மரியாதை கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கண் கலங்கி பேசினார். ஐந்து வருட காலமாக தொடர்ந்து சீரியலில் உழைத்த அவருக்கு ஒரு விருது கூட கொடுக்காமல் மற்ற சேனலுக்கும் செல்ல விடாமல் ஜீ தமிழ் பாடாய் படுத்தி இருப்பதை அவர் அந்த பேட்டியில் போட்டு உடைத்திருக்கிறார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண .. Watch the below Video..
YouTube Video Code Embed credits: Cinema Vikatan