ராஜு முகத்தில் எக்ஸ்பிரசன் வரல என்று நிராகரித்த இயக்குனர்.! ஆடிஷனில் திருப்பி அனுப்பபட்ட ராஜு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆடிஷனுக்கு வந்துவிட்டு தன்னை இயக்குனர் நிராகரித்துவிட்ட செய்தியை தற்போது பிக்பாஸ் சீசன் 5 இன் வெற்றியாளரான ராஜு ஒரு நிகழ்ச்சியின் போது கூறி இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 5 இன் டைட்டில் வின்னரான ராஜு, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் ஸ்கிரிப்ட் ரைட்டராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். பின்னர் சரவணன் மீனாட்சி சீரியலிலும், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்து பிரபலமானார். இவருக்கு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோதே பிக்பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால், சீரியலில் இருந்து விலகினார். பிக்பாஸ் முடிந்த பின்பு ராஜு மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அவர் சீரியலுக்கு வராமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ராஜு முகத்தில் எக்ஸ்பிரசன் வரல என்று நிராகரித்த இயக்குனர்.! ஆடிஷனில் திருப்பி அனுப்பபட்ட ராஜு 1

விளம்பரம்

பிக்பாஸ்க்கு பின்னர் தனக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதாகவும், அதனால் அதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதால் சின்னத்திரையில் மீண்டும் பயணிக்க விருப்பம் இல்லை என்று ராஜு கூறியிருந்தார். சமீபத்தில் வெளியான டான் படத்தில் கூட ராஜு ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இதனால் அவர் வெள்ளி திரையில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து நடத்தப்படும் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அதில் அவர் செய்யும் குறும்புகள் காமெடியை வரவழைக்கின்றன. மேலும் ராஜ வூட்ல பார்ட்டி என்ற ஒரு புதிய நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். திரைப்படங்களில் கால்ஷீட் கிடைக்காத நாட்களில் இதுபோன்று அவர் தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  க்ரிஷ்ஷை தத்தெடுத்து வளர்க்க போறோம் என கூறிய முத்து மீனா..! மறுத்த விஜயா..! அதிர்ச்சியில் ரோகிணி...!

ராஜு முகத்தில் எக்ஸ்பிரசன் வரல என்று நிராகரித்த இயக்குனர்.! ஆடிஷனில் திருப்பி அனுப்பபட்ட ராஜு 3

விளம்பரம்

இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் இந்த ராஜூ வீட்ல பார்த்தே நிகழ்ச்சிக்கு கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்துள்ளது. அதில் அவர்களிடம் பல கேள்விகளை கேட்டு கலாய்த்து வருகிறார் ராஜு. மேலும் அவர் கதிரிடம் பேசும் பொழுது கதிர் மற்றும் ஜீவா ரோலுக்காக தானும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆடிஷனுக்கு வந்திருந்ததாக கூறினார். தன்னிடம் இயக்குனர் கூறும் போது இது மிகவும் கடுமையான உழைப்பாளி ரோல் எனவே நன்றாக நடிக்கும் படி கூறினார். தானும் உயிரைக் கொடுத்து நடித்துக் கொண்டிருந்தபோது கேமராவை ஆஃப் பண்ண சொன்னார் இயக்குனர். பிறகு டைரக்டரிடம் சென்று ஏன் கேமராவை ஆஃப் செய்ய சொன்னீர்கள்? என்று கேட்க உங்களுக்கு எக்ஸ்பிரஷன் வரவில்லை என்று கூறி தன்னை நிராகரித்து விட்ட கதையை ராஜூ சொன்னார். பிறகு டிவியில் கதிரில் நடிப்பை பார்த்த போது அவரும் எக்ஸ்பிரஷன் இல்லாமல் தானே நடிக்கிறார் என்று சொல்லி கதிரையும் கலாய்த்து தள்ளினார். இதனால் மொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது. அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below video..

விளம்பரம்

Youtube video code embed credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment