ஹரிஷ் கல்யாண் நடிப்பில் MS.தோனி தயாரித்துள்ள முதல் படம்.! LGM படத்தின் ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தயாரித்திருக்கும் எல்.ஜி.எம் படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ஹரிஷ் கல்யாண், நதியா, நடிகை இவானா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திர சிங் தோனி முதன்முறையாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். தோனி என்டர்டைன்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர் தற்போது தனது நிறுவனத்தின் மூலமாக முதல் தமிழ் படத்தை தொடங்கி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல தமிழ் ரசிகர்களை கொண்டிருக்கும் மகேந்திர சிங் தோனி தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, முதல் படமே தமிழில் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு lets get married என்கிற பெயரையும் அவர் வைத்திருக்கிறார். இதை சுருக்கி எல்ஜிஎம் என்று அழைக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் MS.தோனி தயாரித்துள்ள முதல் படம்.! LGM படத்தின் ட்ரைலர் இதோ.! 1

இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, லவ் டுடே படத்தில் கதாநாயக நடித்த இவானா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, நதியா, விடிவி கணேஷ், RJ விஜய், வினோதினி வைத்தியநாதன், சாண்டி மாஸ்டர், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசையமைப்பு பணிகளையும் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே செய்திருக்கிறார். மேலும் சாண்டி மாஸ்டர் மற்றும் தினேஷ் மாஸ்டர் ஆகிய இருவரும் இந்த படத்திற்கு நடன இயக்குனர்களாக பணியாற்றி இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையை தோனியின் மனைவி சாக்ஷி சமீபத்தில் வந்து துவங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் இந்த மாத இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. லவ் டுடே படம் போல ரொமான்டிக் கலந்த காமெடி படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்