நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு நிகழ்வு தான் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் வெளியிட்டிருந்த வீடியோ. ராஜ்கிரணின் மனைவியின் மூத்த கணவருக்கு பிறந்தவர் பிரியா. இவர் ராஜ்கிரணின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை முகநூல் மூலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருந்தார். அப்போது ராஜ்கிரண், “இனி எனக்கும், பிரியாவிற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர் என் மகள் கிடையாது. என் பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறி அதிர வைத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முனீஸ் ராஜாவும் பிரியாவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர்களுக்கு மறுபடியும் திருமணமும் செய்து வைத்திருந்தனர் நிலைமை இப்படியாக சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று பிரியா சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் அவர், “நானும் முனீஸ் ராஜாவும் பிரிந்து விட்டோம். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. உங்களை நான் நிறைய காயப்படுத்தி இருக்கிறேன்” என்று மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் முனீஸ் ராஜா தற்போது அதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பேசி இருக்கும் அவர், “என் மனைவி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்தாலே தெரியும், அவர் அவராக பேசினாரா? இல்லை யாரேனும் கட்டாயப்படுத்தி அவரை பேச வைத்தார்களா? என்பது. அதில் பிரியா நாங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் விரைவில் அது குறித்த உண்மைகளை உங்களுக்கு வெளியிடுவேன். அதுவரை யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அந்த காணொளியை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tele Vikatan