முத்தழகுக்காக அஞ்சலியிடம் சவால் விடும் பூமி.. வாரே வா, இதைத் தான் எதிர்பார்த்தோம்..

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடரில் ஒன்றுதான் முத்தழகு சீரியல். இது மதியம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியலில் வழக்கமான இரண்டு மனைவி கதைகள் தான். இந்த சீரியலின் கதாநாயகன் பூமிநாதன். தனது தாய் பேச்சை கேட்கும் ஒருவர். பூமிநாதனின் தாயார் பேச்சியம்மாள் ஊரில் பெரிய தலைவராக இருப்பார். இவர் முத்தழகு என்ற ஏழைப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுது, அந்த அந்த மாப்பிள்ளை ஏமாற்றுக்காரன் என தெரிந்துவிடும். பின்னர் தனது மகனையே அந்த ஏழைப் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைப்பார். ஆனால் பூமிநாதனுக்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பமே இருக்காது. அவர் அம்மா சொன்ன ஒரே காரணத்திற்காக முத்தழகை திருமணம் செய்து கொள்வார். வீடியோ கீழே உள்ளது.

முத்தழகுக்காக அஞ்சலியிடம் சவால் விடும் பூமி.. வாரே வா, இதைத் தான் எதிர்பார்த்தோம்.. 1

பின்னர் முத்தழகுடன் வாழ விருப்பம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு, முத்தழகு மீது ஒரு கட்டத்தில் காதல் ஏற்படுகிறது. அவர்கள் சேர்ந்து வாழ தொடங்கும் போது அவரது முன்னாள் காதலியான அஞ்சலி அவர் வாழ்க்கையில் வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அஞ்சலி கழுத்திலும் தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் இருவரையும் ஒரே வீட்டில் வைத்து வாழ வேண்டிய சூழ்நிலை பூமிநாதனுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் முத்தழகு மற்றும் அஞ்சலிக்கு ஒரு போட்டி ஒன்றை வைக்கிறார் பூமிநாதன். அதில் முத்தழகும் அஞ்சலியும் சேர்ந்து நாற்று நட வேண்டும்.

முத்தழகை விட அஞ்சலி ஒரு நாற்று அதிகமாக நட்டு விட்டால் கூட அஞ்சலியின் அன்பு உண்மை என்று தான் ஏற்றுக் கொள்வதாக பூமிநாதன் கூறுகிறார். சிறு வயது முதலே வயலில் இறங்கி வேலை பார்த்து வரும் முத்தழகை 10 நிமிடத்தில் நாட்டு நட கற்றுக்கொண்டு வீழ்த்தி விடுவேன் என்று சபதம் எடுத்து, நாற்று நடத் தொடங்குகிறார் அஞ்சலி. இந்த புரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்