விஜய் டிவி முத்தழகு சீரியல் ஹீரோவுக்கு நடந்த விபத்து.! காயங்களுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் முத்தழகு. இந்த சீரியலின் கதாநாயகன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பதிவை தற்போது தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். முத்தழகு சீரியலின் ஹீரோ தான். ஆஷிஷ் சக்கரவர்த்தி, இவர் விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடரில் பூமிநாதன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது வழக்கமான இரண்டு மனைவி கதைகளையே மையமாகக் கொண்டுள்ளது. இந்த சீரியலின் கதாநாயகன் பூமிநாதன் தனது தாயார் பேச்சை தட்டாமல் இருப்பார். பூமிநாதனின் தாயார் ஊரில் தலைவராக இருக்கும் காரணத்தினால், முத்தழகு என்ற ஏழைப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடிப்பார். அப்போது அந்த மாப்பிள்ளை ஏமாற்றுக்காரன் என்று தெரிய வந்ததால் தனது மகனுக்கே அந்த ஏழைப் பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவார்.

விஜய் டிவி முத்தழகு சீரியல் ஹீரோவுக்கு நடந்த விபத்து.! காயங்களுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்.! 1

இந்த திருமணத்தில் பூமிநாதனுக்கு சிறிதும் விருப்பம் இருக்காது. ஆனால் தாயார் சொன்ன காரணத்திற்காக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார். பின்னர் பூமிநாதன் அவரது காதலியான அஞ்சலிக்கும் தாலி கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவருக்கும் தாலி கட்டி தற்போது பூமிநாதன் – முத்தழகு – அஞ்சலி ஆகிய மூவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.அங்கிருந்து தான் குழப்பமும் சண்டையும் வருகிறது. இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் ஆஷிஷ் சக்ரவர்த்தி. பார்ப்பதற்கு செம ஸ்மார்ட்டாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று தனது instagram பக்கத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக சில புகைப்படங்களையும் ஆஷிஷ் சக்கரவர்த்தியை பகிர்ந்து இருந்தார்.

அதில் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நாங்களும் மற்ற பயணிகளும் சிறு காயங்களுடன் தப்பித்து விட்டோம். இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று அவர் பகிர்ந்து இருந்தார். மேலும் அந்த விபத்தின் போது தனக்கு அடிபட்ட காயங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஆஷிஷ் சக்கரவர்த்திக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். விபத்து குறித்து ரசிகர்கள் தற்போது கமெண்ட்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு தற்போது குணமடைந்து வருவதாக அனைவருக்கும் பதில் அளித்து வருகிறார் ஆஷிஷ்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்