டப்பிங் தியேட்டரில் இருந்து நடக்க முடியாமல் மாரிமுத்து நடந்து செல்லும் அவரது கடைசி வீடியோவின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பலரையும் கலங்கடிக்க வைத்துள்ளது. சன் தொலைக்காட்சியும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமான மாரிமுத்து இன்று திடீரென மரணம் அடைந்திருந்தார். டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோதே அசௌகரியமாக உணர்ந்த அவர் வெளியில் சென்று இருக்கிறார். பின்னர் அவர் திரும்பவே இல்லை. இதனால் உடன் பணியாற்றி வந்த கமலேஷ் என்பவர் அவருக்கு போன் செய்து பார்த்தும் அவர் எடுக்கவில்லை. பின்னர் கமலேஷுக்கு மருத்துவமனை வாசலிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்து விட்ட தகவல் மட்டுமே கிடைத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாரிமுத்து இறந்த செய்தி தமிழ் திரையுலகிலகினரை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. நல்ல நடிகர், நல்ல மனிதர், வளர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் இப்படி அசம்பாவிதமாக இறந்து விட்டாரே என்று சொல்லி பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். வெள்ளித்திரை, சின்னத்திரை தொடங்கி மாரிமுத்துவின் மரணம் பலரையும் உலுக்கியிருந்தது. பகுத்தறிவுவாதியாக வலம் வந்த மாரிமுத்து, சமீபத்தில் ஜோதிடர்களுடன் செய்த விவாதத்தின் காரணமாகத்தான் அவர் இறந்துவிட்டார் என்று பலரும் வதந்தியை கிளப்பி வந்தனர். ஆனால் அதில் உண்மை கிடையாது, ஜோதிடர்கள் அப்படி செய்பவர்கள் அல்ல என்று மாரிமுத்துடன் விவாதம் செய்த ஜோதிடர் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.

இந்த நிலையில் மாரிமுத்துவின் கடைசி வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் டப்பிங் தியேட்டரில் இருந்து வெளியே வந்த மாரிமுத்து எதிரில் நிறுத்தி வைக்க வந்த காரை எடுக்க முடியாமல் தட்டு தடுமாறி உள்ளே செல்கிறார். பின்னர் காரை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் உயிர் பிரிந்துள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கலங்கிப் போய் உள்ளனர். யாரையாவது உதவிக்கு அழைத்து இருந்தால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காதே என்று சொல்லி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun News