நடிகர் மாரிமுத்து ஜோதிடத்தையும் கடவுளையும் பழித்துப் பேசியதால் தான் இறந்துவிட்டார் என்று சொல்லி இன்று காலை முதலே இணையத்தில் பலரும் வன்மத்துடன் பதிவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து மாரிமுத்து உடன் வாக்குவாதம் செய்த ஜோதிடர் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் பல அதிர்ச்சி தகவல்களை கூறியிருக்கிறார். இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்த மாரிமுத்து சில நாட்களுக்கு முன்பு ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் ஜோதிடம் குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நாடு இவ்வளவு பின்னோக்கி சென்றதற்கு காரணமே ஜோதிடர்கள் தான். ஜோதிடத்தையும் ஜாதகத்தையும் ஒழித்து விட்டால் நாடு நன்றாக இருக்கும் என்று சொல்லி காட்டமாக பேசி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது திருச்சியை சேர்ந்த ஜோதிடர் மகரிஷி மந்த்ராச்சலம் என்பவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜோதிடர்கள் பொய் சொல்பவர்கள் என்பதை நீங்கள் நிரூபித்தால் நான் என்னுடைய இரண்டு கோடி சொத்தை எழுதி தருகிறேன், இல்லை என்றால் நீங்கள் இரண்டு கோடி எனக்கு தருவீர்களா? என்று மந்த்ராச்சலம் மாரிமுத்து உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மாரிமுத்து அந்த்ஜோதிடரை “நான் கடவுளையே நம்பாத ஆளு, நீ யாருயா? உக்காருயா” என்று சொல்லி ஒருமையில் பேசியிருந்தார். பின்னர் தான் பேசியது தவறு என்று மந்த்ராசலத்திடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆனால் ஜோதிடர்களை புண்படுத்தி விட்டதாக சொல்லி மாரிமுத்து மீது பல இடங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது மாரிமுத்து காலமாகிவிட்டார். இது குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், ஜோதிடர்களை பற்றி தவறாக பேசுதால்தான் மாரிமுத்து இந்த நிலைமை சிலர் வன்மத்துடன் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் பேட்டி அளித்துள்ள ஜோதிடர் மந்த்ராசலம் அவர் ஒரு நல்ல நடிகர் நடிகரை இழந்து விட்டோம், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும், ஜோதிடத்தை தவறாக பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Thanthi TV