‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சண்டை.! அடித்துக்கொண்ட நடிகைகள்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ என்கிற சீரியலில் நடித்து வரும் சசி லயாவுக்கும், மற்றொரு நடிகையான ஆர்த்தி ராமுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது் என்ன நடந்தது என்பது குறித்து சீரியல் நடித்த மற்ற நடிகர்கள் தற்போது விளக்கம் கொடுத்திருக்கின்றனர். நாற்காலிக்காக இந்த சண்டை நடந்திருப்பதாக தற்போது தெரிய வந்திருக்கிறது. டிக் டாக் செயலி மூலமாக பிரபலமானவர் லயா தர்மராஜ். இவர் தற்போது சசி லயா என்ற பெயருடன் சீரியல்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுடன் இவர் போட்ட சண்டை இணையத்தில் வைரலானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சண்டை.! அடித்துக்கொண்ட நடிகைகள்.! 1
தொடர்ந்து தற்போது தன்னுடன் நடித்த சக நடிகை ஒருவரை சூட்டிங் ஸ்பாட்டில் இவர் தாக்கும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ என்கிற சீரியல் தண்டலத்தில் நடந்து வருகிறது. இதில் லயா மற்றும் ஆர்த்தி ராம் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் சசி லயா சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது ஆர்த்தி அங்கு வர அவர் அமர்வதற்கு நாற்காலிகள் இல்லாமல் இருந்துள்ளது. எனவே சீனியர் நடிகை என்ற முறையில் தனக்கு நாற்காலி வேண்டுமென்று ஆர்த்தி தான் கேட்டதாகவும், அதற்கு சசி லயா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே லயாவை ஆர்த்தி வீடியோ எடுக்கத் தொடங்கி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  என் கேரக்டர் பத்தி தப்பா சொல்லாத நிரூப்.. மனமுடைந்து அழுத ஜூலி | BiggBoss Ultimate Mar02 Promo1

'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சண்டை.! அடித்துக்கொண்ட நடிகைகள்.! 3
இதனால் போனை ஆஃப் செய்யும்படி கூறி லயா போனை பிடிங்கியதாகவும், அதற்கு ஆர்த்தி அவரை அடிக்க முயன்றதாகவும், அதற்கு திருப்பி பதிலடி கொடுக்கும் விதமாக சசிலயா அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், வாடி போடி என்று தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment