மீனாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதியை பங்கம் செய்துவிட்ட முத்து.! தரமான சம்பவம்.! ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவை வேலைக்காரி போல நடத்தி அவருக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்திய ஸ்ருதியை தற்போது பதிலுக்கு முத்து சரியான பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்தி இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலையின் மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் இரண்டாவது மகன் முத்து ஏழைப் பெண்ணான மீனாவை திருமணம் செய்து கொள்கிறார். மீனாவை முதலில் முத்துவின் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதியை பங்கம் செய்துவிட்ட முத்து.! தரமான சம்பவம்.! ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

ஆனால் அவர் திருமணத்தன்று ஓடி விடுவதால் மீனா முத்துவை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் மீனா ஏழை பெண் என்பதால் மாமியார் விஜயா அவரை மிகவும் மோசமாக நடத்துகிறார். இந்த நிலையில் புதிதாக திருமணமாகி வந்த ரவியின் மனைவி ஸ்ருதியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு மீனாவை மிகவும் மோசமாக நடத்துகிறார். மீனாவை துணி துவைக்க சொல்லிவிட்டு அதற்கு கூலியாக அவர் பணத்தையும் வழங்குகிறார். இதனால் மீனா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது முத்து மீனாவுக்காக ‘விஜயா மலர் அங்காடி’ என்கிற ஒரு பூக்கடையை வீட்டின் வாசலிலேயே திறந்து கொடுக்கிறார். அந்த திறப்பு விழாவை ஸ்ருதி திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொள்கிறார். ஸ்ருதியும் ரிப்பன் வெட்டி அந்த கடையை திறந்து வைக்கிறார்.

தொடர்புடையவை  ஹனிமூனுக்கு போன இடத்தில் மரண குத்தாட்டம் போடும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.!

மீனாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதியை பங்கம் செய்துவிட்ட முத்து.! தரமான சம்பவம்.! ப்ரோமோ இதோ.! 3
அப்போது முத்து அவருக்கு கூலியாக ரூ.2500 ஐ கொடுத்து சரியான பதிலடி கொடுக்கிறார். இதனால் கடுப்பான ஸ்ருதி கோபத்தில் வீட்டிற்குள் செல்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment