முத்தழகு சீரியல் நடிகைக்கு நடந்த கார் விபத்து.! தற்போதைய நிலை என்ன? வெளியான வீடியோ

வெளியிட்டது

முத்தழகு சீரியலில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷாலிக்கு தற்போது கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. சீட் பெல்ட் அணிந்து செல்லுமாறும், ஏர்பேக் இருந்ததால் தான் உயிர் தப்பியதாகவும் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் வைஷாலி. அதன் பின்னர் ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டுப பொண்ணு என்கிற பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்கிற சீரியலிலும் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்தழகு சீரியல் நடிகைக்கு நடந்த கார் விபத்து.! தற்போதைய நிலை என்ன? வெளியான வீடியோ 1

இந்த சீரியலில் பூமிநாதனும் அஞ்சலியும் காதலித்து வந்த நிலையில் பூமிக்கு முத்தழகு என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் முத்தழகுக்கு முன்பே பூமி தனக்கு தாலி கட்டினார் என்று சொல்லி அஞ்சலி முத்தழகுடன் போட்டி போடுகிறார். பூமிநாதன் யாரை தனது மனைவியாக தேர்வு செய்யப் போகிறான்? அஞ்சலி கழுத்தில் தாலியே கட்டாத போது அவர் தாலி கட்டியதாக நாடகமாடி பூமிநாதனுடன் வந்து இணைந்திருக்கிறார். எனவே அவரை விட்டுவிட்டு முறைப்படி தாலி கட்டிய முத்தழகைத் தான் பூமி மனைவியாக ஏற்றுக் கொள்வான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வைஷாலி instagram பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் காரில் பயணிக்கும் பொழுது சீட் பெல்ட்டை அணியுங்கள், நமது பாதுகாப்பிற்கு தான் சீட் பெல்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் கார் விபத்துக்குள்ளான போது ஏர்பேக் என்னை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியது. எனவே சிறு காயத்துடன் தப்பித்தேன். நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொழுது சீட் பெல்ட் அவசியம் என்று அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் பார்த்து கவனமாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்..! வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்