குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பாலா தற்போது மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் பாலா. அதன் பின்னர் இவருக்கு குக் வித் கோமாளியில் கோமாளியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு மிகப்பிரபலம் கிடைத்தது. தற்போது பாலா தனது சொந்த சேமிப்பில் பல உதவிகளை செய்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

30 மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். மேலும் முதியவர்களுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் அறந்தாங்கியில் உள்ள கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர் உட்பட 18 மலை கிராமங்களுக்கு புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். வெண்டிலேட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஐசியூ ஆம்புலன்ஸை வழங்கியிருக்கிறார். இந்த மலைகிராமங்களில் சுமார் 8000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தாண்டி வந்து சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதனால் பாலா தனது சொந்த சேமிப்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அவசர காலத்தில் பயன்படும் நவீன ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி வழங்கி இருக்கிறார். இதன் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பாலாவிற்கு பலரும் பொன்னாடை போர்த்தியும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். அவர் பேசும் பொழுது ரசிகர்களால் தான் இது முடிந்தது. உங்கள் புண்ணியத்தால் நான் இப்போது நன்றாக சம்பாதிக்க தொடங்கி இருக்கிறேன். இன்னும் மக்களுக்கு நிறைய செய்வேன் என்று கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O