பெற்றோருக்கு 60-வது திருமணம் செய்து அழகு பார்த்த முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷாலி தற்போது தனது பெற்றோருக்கு 60-வது திருமணம் நடத்தி வைத்து அழகு பார்த்துள்ளார்.

பெற்றோருக்கு 60-வது திருமணம் செய்து அழகு பார்த்த முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி.! 1

அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை என்கிற சீரியலில் நடித்து பிரபலமானவர் வைஷாலி. பின்னர் ராஜா ராணி சீசன் ஒன் சீரியலில் சஞ்சீவின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பாக சீமராஜா படத்தில் இவர் நடித்திருக்கிறார். அதன் பிறகு படங்களை நடிக்கும் வாய்ப்பு குறைந்த பின்பு மீண்டும் சீரியல் பக்கம் தலை காட்டத் தொடங்கியிருக்கிறார்.

அவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தார் வைஷாலி.

பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். தற்போது மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பி இருக்கும் வைஷாலி, முத்தழகு என்கிற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இதில் ஹீரோ பூமிநாதனுக்கு இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு தேவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருப்பதாக அறிவித்து இருந்தார். அவரும் அவரது கணவரும் இணைந்து உடற்பயிற்சி கூடம் ஒன்றை தொடங்கி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது தாய் தந்தையருக்கு 60-வது திருமணம் செய்து அழகு பார்த்துள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கும் அவரது பெற்றோர்களுக்கும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்