கணேஷ் வெங்கட்ராமன் தற்போது தனது மனைவியின் நிஷாவிற்கு வளைகாப்பு நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கணேஷ் வெங்கட்ராமனின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் ஆகும். பின்னால் அவரது தந்தை தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். மும்பையில் பிறந்து வளர்ந்த கணேஷுக்கு கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் இருந்து வந்தது.

பின்னர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போதே இவர் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார். இயக்குனர் முருகதாஸ் ஒரு விளம்பரத்துக்காக கணேஷை தேர்வு செய்திருந்தார். அன்று தொடங்கி சுமார் 200க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

பின்னர் இவர் அபியும் நானும் என்கிற படத்தின் மூலமாக தமிழில் நடிகராக அறிமுகமானார். மேலும் மாயாவி 3-டி என்னும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலமாக சின்ன திரையிலும் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் ஆகிய பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார் கணேஷ் ஆனால் இந்த நிகழ்ச்சியில் போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் பாதியிலேயே வெளியேறினார். கணேஷுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த நிஷாவுக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

நிஷா ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர்கள் இருவருக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்திருந்தது.

சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் நிஷா. இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தியிருக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்.
View this post on Instagram
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் நிஷா. இதை பார்த்து ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கணேஷ் வெங்கட்ராமன் நிஷா தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூற வருகின்றனர்..!