பணத் திமிர் பிடித்த மகன்.! மகனின் பாசத்துக்கு ஏங்கும் தந்தை.! “கருமேகங்கள் கலைகின்றன” ட்ரைலர் இதோ.!

இயக்குனர் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என்று காலம் கடந்து ரசிகர்களை தனது திறமையான இயக்கத்தால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இயக்குனர் தங்கர்பச்சான். தற்போது இவர் யோகி பாபு, பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணத் திமிர் பிடித்த மகன்.! மகனின் பாசத்துக்கு ஏங்கும் தந்தை.! "கருமேகங்கள் கலைகின்றன" ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை என் கே ஏகாம்பரமும் படத்தொகுப்பை பி. லெனினும் மேற்கொண்டு இருக்கின்றனர். படத்தை துரை வீரசக்தி தயாரித்திருக்கிறார். படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது ஒரு ஃபீல் குட் படத்திற்கான அடித்தளத்தை தங்கர் பச்சான் இந்த படத்தில் அமைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. உறவுகள் இடையே நடக்கும் சிக்கல்களை ட்ரைலர் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. ஒரே வீட்டில் அப்பனும் மகனும் 10 வருடமாக பேசாமல் இருந்திருக்கிறோம் என்ற வசனங்கள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் சிக்கலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நேர்மையான தந்தை, ஊழலுக்கு துணை போகும் மகன். இந்த இருவருக்கிடையில் யோகி பாபு கதாபாத்திரம் கிளைக் கதையாக விரிகிறது. வித்தியாசமாகவும் அதே சமயம் விறுவிறுப்புடனும் இந்த ட்ரெய்லர் நகர்கிறது.

தொடர்புடையவை  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் மாய நிழல் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

பணத் திமிர் பிடித்த மகன்.! மகனின் பாசத்துக்கு ஏங்கும் தந்தை.! "கருமேகங்கள் கலைகின்றன" ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. அந்த ட்ரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment