மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சரத்குமார்.! பரம்பொருள் படத்தின் ட்ரைலர் வெளியானது.!

நடிகர் சரத்குமார் விஐபி பட வில்லன் அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படமான பரம்பொருள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. சிலை கடத்தலை அடிப்படையாக வைத்து சரத்குமார் விஐபி படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் தான் பரம்பொருள். 90களில் முன்னணி நாயகனாக இருந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் நடிகர் சரத்குமார். இவர் கடைசியாக அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த “போர்த்தொழில்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் கண்டிப்பான போலீசாக சரத்குமார் நடித்திருந்து வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. சைக்கோ கொலையை மையமாக வைத்து அந்த படம் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது சிலை கடத்தலை மையமாக வைத்து பரம்பொருள் எடுக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சரத்குமார்.! பரம்பொருள் படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

இயக்குனர் சி அரவிந்த்ராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமாரும் அமிதாஷ் பிரதானும் இணைந்து சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை தேடி பயணம் செய்கின்றனர். கடத்தப்படும் சிலைகளின் தன்மை குறித்து ஆராயும் அதிகாரியாக அமிதாஷ் பிரதான் இருக்கிறார். போர்த்தொழில் படத்தில் வருவது போல நேர்மையான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் சரத்குமார் நடித்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

தொடர்புடையவை  தனுஷ் இயக்கி நடிக்கும் 52வது படத்தின் பெயர் வெளியாகியது..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சரத்குமார்.! பரம்பொருள் படத்தின் ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாமல் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்புடன் தற்போது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: U1 Records

விளம்பரம்

Leave a Comment