மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு கணவருடன் செம்ம குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி..!

வெளியிட்டது

மைனா நந்தினியும் அவரது கணவர் யோகேஸ்வரனும் தற்போது தசரா படத்திலிருந்து வெளியாகி ட்ரெண்டாகி வரும் மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். மதுரையைச் சேர்ந்தவர் மைனா நந்தினி. இவர் முதன்முறையாக தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சென்னைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தார். மீனாட்சிக்கு தோழியாக வரும் இந்த கதாபாத்திரம் மீனாட்சிக்கு நிகரான ரசிகர்களை பெற்றது. அன்று தொடங்கி இன்று வரை இவரை இவரது ரசிகர்கள் மைனா என்று அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துடன் ஒன்று போயிருந்தார் மைனா நந்தினி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார் மைனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு கணவருடன் செம்ம குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி..! 1
இந்த தம்பதிகளுக்கு துருவ் என்கிற மகனும் இருக்கிறார். துருவ் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகிறார் மைனா. மேலும் அவுட்டிங் செல்வது, டூர் செல்வது என்று பல வீடியோக்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் மைனா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தி இருந்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, நீலி போன்ற பல நாடகங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ஷூட்டிங் நெல் பிஸியாக இருந்து வரும் மைனா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் கருப்பு நிற உடையில் அவரும் அவரது கணவர் யோகியும் டிரெண்டிங் பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தா பாடி இருக்கும் மைனர் வேட்டி கட்டி என்கிற பாடல் தற்போது இணையத்தில் செம டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. பலரும் அந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மைனாவும், யோகியும் அதே பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் போல ஆடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்