ஸ்ருஷ்டி போல மேக்கப் போட படாத பாடு பட்டுள்ள குரேஷி.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக குரேஷி எவ்வாறு கஷ்டப்பட்டு லேடி கெட்டப் போடுகிறார் என்பதையும், எவ்வாறு கஷ்டப்பட்டு கெட்டப்பிற்காக உழைத்தனர் என்பதையும் ஒரு சிறிய வீடியோவாக எடுத்து அதை தற்போது இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக கோமாளிகள் செலவிடும் உழைப்பு அளப்பரியது. அவர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பல தியாகங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக கெட்டப் போடும் பொழுதும், வேறு ஏதாவது கெட்ட ரவுண்டுகளிலும் அவர்கள் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு வருகின்றனர். மேலும் நிகழ்ச்சி முடியும் வரை அந்த மேக்கப் கலைக்காமல் இறுதிவரை வைத்துள்ளனர் .குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரே நாளில் எடுக்கப்படும் நிகழ்ச்சியாகும். சனிக்கிழமை எபிசோடும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடும் ஒரே நாளில் எடுக்கப்படுவதாகும். எனவே காலை ஒரு மேக்கப் போட்டால் அதை நடு இரவு வரை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருஷ்டி போல மேக்கப் போட படாத பாடு பட்டுள்ள குரேஷி.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.! 1

விளம்பரம்

அதன்படி தற்போது குரேஷி ஸ்ருஷ்டி போல வேடம் அணிந்து வந்திருந்தார். கடந்த வாரம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரும் குக்குகள் போல வேடம் அணிந்து வந்திருந்தனர். ஏற்கனவே கடந்த சீசனிலும் இதுபோன்ற ஒரு எபிசோடு ஒளிபரப்பானது. அதில் ஸ்ருதிகா போல குரேஷி வேடமணிந்து வந்திருந்தார். அந்த எபிசோடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோல் இந்த முறையும் குக்குகள் போல வேடமணியும் ரவுண்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் புகழ் ஷெரின் போலவும், குரேஷி ஸ்ருஸ்டி போலவும் வேடமணிந்திருந்தனர். மேலும் சிவாங்கி போல மோனிஷாவும், மதுரை காளையன் போல ஜிபி முத்துவும், விசித்ரா போல ரவீனாவும் மேக்கப் போட்டு வந்திருந்தனர். இந்த எபிசோடுகள் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ஷெரின் போல புகழ் செய்ததும், ஸ்ருஷ்டி போல குரேஷி செய்ததும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. சீசன் 4 மிகப்பெரிய வரவேற்பு பெறாத நிலையில் கடந்த வாரம் நடந்த ரவுண்டுக்கு பிறகு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடர்புடையவை  மேகம் கருக்காதா பாடலுக்கு நித்யா மேனன் போல, செம்ம Cute ஆக ஆடிய சைத்ரா ரெட்டி.!

ஸ்ருஷ்டி போல மேக்கப் போட படாத பாடு பட்டுள்ள குரேஷி.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.! 3

விளம்பரம்

இந்த கெட்டப் ரவுண்டுக்காக ஸ்ருஸ்டி போல எப்படி மேக்கப் போடப்பட்டது என்பதை விளக்கி குரேஷி தற்போது ஒரு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் காலையில் எழுந்து ஷூட்டிங் நடக்கும் ஈவிபி சிட்டிக்கு வந்து தாடி மீசையை ஷேவ் செய்து எவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டுள்ளார் என்பதை விளக்கி இருக்கிறார். அந்த வீடியோவை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Kuraishi Vibes

விளம்பரம்

Leave a Comment