சின்னத்திரை உலகின் காமெடி நடிகையாக வலம் வரும் மைனா நந்தினி இன்று தனது youtube பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் தற்போது வரலட்சுமி பூஜை நடத்தி அந்த வீடியோவை அவர் தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. இந்த தொடருக்கு பின்னர் இவரை பலரும் மைனா என்று அழைத்து வந்தனர். பொதுவாகவே திரைத்துறையில் பெண் காமெடி நடிகைகள் மிக குறைவு. அந்த வகையில் அந்த இடத்தை நிரப்பும் விதமாக மைனா காமெடி நடிகையாக திரைத்துறையில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மைனாவிற்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நம்ம வீட்டுப் பிள்ளை, வெண்ணிலாக் கபடி குழு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, அரண்மனை 3, விக்ரம், விருமன், சர்தார் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மைனாவிற்கு முதலில் திருமணம் ஆகி அந்த கணவர் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் இரண்டாவதாக யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு துருவ் என்கிற மகனும் இருக்கிறார். துருவ்வின் குறும்புகளை அடிக்கடி வீடியோவாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மைனா.
இந்த நிலையில் மைனா நந்தினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற வரலட்சுமி பூஜையை தனது வீட்டிலும் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். பலரும் அந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Myna Wings