Categories: சினிமா

வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தின் 2வது சிங்கிள் “பணக்காரன்” பாடல் வெளியானது.!

வெளியிட்டது

மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் இருந்து தற்போது இரண்டாவது சிங்கள் பாடல் என்று தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் உலகின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் மதுரையிலிருந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்து தனது கடுமையான முயற்சியால் இன்று தமிழின் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் சில காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் விலகி இருந்தபோது இவருடைய காமெடிகளும் மீம்ஸ்களும்தான் பலருக்கும் ஆறுதலாக இருந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கி இருந்த பலருக்கும் வடிவேலுவின் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளும், காமெடிகளும் தான் சற்று ஆறுதலை கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தின் 2வது சிங்கிள் "பணக்காரன்" பாடல் வெளியானது.! 1

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு. ஏற்கனவே சுராஜ் தலைநகரம் மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது வடிவேலுவின் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. இந்தப் படம் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதி செய்து இருக்கிறது. இதனால் தொடர்ந்து படத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் மற்றும் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்த படத்தில் வடிவேலுவுடன் பட நகைச்சுவை நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.


இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தில் இருந்து அப்பத்தா பாடல் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. இந்த பாடலை பிக்பாஸ் புகழ் அசல் கோளாறு எழுதியிருந்தார். இந்த நிலையில் பணக்காரன் என்கிற இரண்டாவது சிங்கள் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். தற்போது இந்த பாடல் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த பாடலை காண..! Watch the below Video..!

Youtube Video Code Embed Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்