பிக்பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் பற்றி தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. வார இறுதி நாள் என்பதால் ஓட்டு எண்ணிக்கையில் பின் தங்கியிருக்கும் போட்டியாளரை பிக்பாஸ் வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி அமுதவாணன் மற்றும் ராபர்ட் மாஸ்டருக்கு மிகக்குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளன. அக்டோபர் ஒன்பதாம் தேதி 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 6. எப்பொழுதும் 16 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, முதல் முறையாக 21 பேரைக் கொண்டு ஆரம்பித்தனர். வழக்கம் போல கமலஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. எனவே இரண்டாவது வாரத்தில் இருந்து தான் எலிமினேஷன் செய்ய தொடங்குவார்கள். இரண்டாவது வாரம் ஜி.பி முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி வெளியேறிவிட்டார். அந்த வாரமே நடன இயக்குனர் சாந்தியையும் எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறும், நான்காவது வாரத்தில் ஷெரினாவும், ஐந்தாவது வாரம் மகேஸ்வரியும், ஆறாவது வாரம் நிவாஷினியும் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் வாக்கெடுப்பு தொடங்கிய ஆரம்பம் முதலே மணிகண்டன் கடைசி இடத்தில் இருந்து வந்தார். ஆனால் திடீர் திருப்பமாக மணிகண்டனுக்கு வாக்குகள் அதிகமாக தொடங்கியது. கடைசி இடத்தில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் அமுதவாணன் இருக்கிறார்கள்.

போட்டிகளில் மற்றும் வீட்டு வேலைகளில் சரியாக பங்கெடுத்து கொள்ளாத ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்போதும் ரட்சிதாவுடன் கடலை போட்டுகொண்டு இருப்பது மற்றும் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு போட்டியில் சரியாக பங்கெடுக்காமல் இருந்து வந்த ராபர்ட் மாஸ்டரே இந்த வாரம் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.