விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு என்று தனி ரசிக பட்டாளமே உள்ளது. முன்பெல்லாம் நெடுந்தொடர்கள் என்றாலே அது சன் டிவி மட்டும்தான் என்ற காலம் மாறிப் போய் விஜய் டிவி சீரியல்களுக்கு பல கோடி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. நாம் இருவர் நமக்கு இருவர், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லெட்சுமி, பாரதி கண்ணம்மா, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2, மௌனராகம் போன்ற மாலை நேரங்களில் வெளியாகும் தொடர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிநடை போடும் ஒரு தொடர்தான் நாம் இருவர் நமக்கு இருவர். வீடியோ கீழே உள்ளது.

மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடிக்கும் இந்த தொடர் செந்திலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சரவணன் மீனாட்சி சீரியலுக்குப் பிறகு செந்திலுக்கு எந்த ஒரு பெரிய சீரியலும் கை கொடுக்கவில்லை. ஆனால் நாம் இருவர் நமக்கு இருவர் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. தற்போது இந்த நாடகம் முடிவுக்கு வருகிறது. இந்த நாடகம் முதல் பாகம், இரண்டாம் பாகம் என வெளிவந்தது. இதுவரை மொத்தம் 1040 எபிசோடுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. பல திருப்பங்கள், பல அதிரடிகள் என கதை மிக விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. Youtube Video Code Embed Credits: Tamil viral videos 24×7
ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தற்போது சீரியல் முடிவடைகிறது. கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் மற்றும் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நாடகத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் கத்தியாக நடித்தவர் ராஜூ. இவர் பிக்பாஸுக்கு சென்று இருந்ததால் நாடகத்தில் வெளிநாடு சென்று இருப்பது போல் காண்பித்து இருந்தனர். தற்போது கடைசி நாள் ஷீட்டிங்கில் ராஜூம் இருப்பதால் மீண்டும் கத்தி கதாபாத்திரம் என்ட்ரியுடன் முடியும் போல் தெரிகிறது. ஆரம்பத்தில் மகாவாக நடித்து பின் சீரியலை விட்டு விலகிய நடிகை ரட்சிதாவும் இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..