சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

யாரடி நீ மோகினி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்திராவிற்கு தற்போது ஐந்தாவது மாத வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இவர் முதன்முறையாக கிடா பூசாரி மகுடி என்கிற படத்தின் மூலமாகத்தான் முதன்முறையாக அறிமுகமானார். இவருக்கு வெள்ளி திரை பெரிய அளவில் கை கொடுக்காமல் போனதால் சின்னத்திரை பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார். முதல் தொடரே ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்கிற தொடரில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனங்களை வெற்றி கொண்டார் நட்சத்திரா. இந்த நாடகத்தில் கிராமத்து பெண்ணாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிப்போனார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! இதோ வீடியோ.! 1

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சீரியலில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவரையே தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் திரை துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் வீட்டில் சம்மதத்துடன் இந்த திருமணம் கோவிலில் வைத்து எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார் நட்சத்திரா. திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆன நிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பச்சை நிற புடவை அணிந்து கழுத்தில் மாலையுடன் அழகாக தோன்றுகிறார் நட்சத்திரா.


அவருக்கு அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நலங்கு வைத்து அவருக்கு பிடித்த உணவுகளை ஊட்டி இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர். நட்சத்திராவின் திருமணத்தை விமர்சித்து பேசியிருந்த அவரது தோழி ஸ்ரீநிதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த அழகான வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Nakshathra’s Diary

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்