பாக்கியாவுக்கு அடுத்த ஆப்பு அடித்த ராதிகா.! தோளோடு தோள் கொடுக்கும் தோழன் பழனிசாமி.!

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீண்டும் பாக்கியலட்சுமிக்கு ராதிகா மற்றொரு டாஸ்க்கை கொடுக்கிறார். கேண்டீனில் அடுத்த வாரம் முதல் பேக்கரி ஐட்டங்கள் சமைக்க வேண்டும் என்று அவர் டாஸ்க் கொடுக்கிறார். இதனால் நிலைகுலைந்து போன பாக்யா எப்படி அதை செய்யப் போகிறார் என்பது குறித்து தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. தற்போது இந்த சீரியலின் கதைப்படி பாக்கியாவின் கணவர் இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ராதிகா ஒரு கம்பெனியில் ஹெச் ஆர் ஆக வேலை பார்த்து வர, அதே கம்பெனியின் கேண்டீன் காண்ட்ராக்ட் ஆர்டரை எடுப்பதற்காக பாக்யா செல்கிறார். பல சிக்கலுக்கு மத்தியில் அந்த கான்ட்ராக்ட்டை அவர் எடுத்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து பாக்யாவிற்கு ராதிகா தொந்தரவு கொடுத்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவுக்கு அடுத்த ஆப்பு அடித்த ராதிகா.! தோளோடு தோள் கொடுக்கும் தோழன் பழனிசாமி.! 1

விளம்பரம்

பாக்யா எப்படியாவது இந்த கேன்டீன் காண்ட்ராக்ட் ஐ விட்டு விலக வேண்டும் என்று ராதிகா கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அதன் முதல் படியாக கேன்டீனுக்கு சமைக்க வரும் அனைவரும் யூனிஃபார்ம் அணிந்து வரவேண்டும் என்று ஆணையிடுகிறார். யூனிஃபார்ம் என்றால் புடவை கிடையாது, சுடிதாரில் வரவேண்டும் என்று கூற செல்வி, பாக்யா உட்பட அனைவரும் சுடிதார் அணிந்து வருகின்றனர். இது ராதிகாவிற்கு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி சுடிதார் அணிய ஒத்துக்கொள்ள மாட்டார், எனவே பாக்யா இந்த காண்ட்ராக்டை விட்டு ஓடி விடுவார் என்று எண்ணத்தில் இவ்வாறு செய்திருந்தார் ராதிகா. ஆனால் ஈஸ்வரியோ சுடிதார் அணிந்து கொள்ள ஒப்பு கொண்டு விட்டார். இதனால் ராதிகாவின் முதல் திட்டத்திற்கு ஆப்பு அடித்தாகிவிட்டது. தற்போது ராதிகா கேண்டினில் அடுத்த வாரம் முதல் பேக்கரி உணவுகள் சமைக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். பாக்யாவிற்கு அது போன்ற பேக்கரி உணவுகள் சமைக்க தெரியாது.

தொடர்புடையவை  பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த தமிழ் முன்னணி ஹீரோ.! ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ

பாக்கியாவுக்கு அடுத்த ஆப்பு அடித்த ராதிகா.! தோளோடு தோள் கொடுக்கும் தோழன் பழனிசாமி.! 3

விளம்பரம்

எனவே அவர் சோகமாக அமர்ந்திருந்த நிலையில்,அவரது நண்பர் பழனிச்சாமி பாக்யாவிடம் என்னவென்று கேட்கிறார். அப்போது பாக்யா நடந்ததை கூற நம் யார் நம் வாழக்கூடாது என்று நினைக்கிறார்களோ அவர்கள் முன்பு நாம் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று சொல்லி பாக்யாவிற்கு உத்வேகம் கொடுக்கிறார். மேலும் வீடியோ காலில் பாக்யாவிற்கு பேக்கரி உணவுகள் எப்படி சமைப்பது என்று சொல்லியும் கொடுக்கிறார். அவர் சொல்ல சொல்ல பாக்யாவும் அதை அப்படியே பின்பற்றி கேக்குகள் தயாரித்து பார்க்கிறார். இதனால் ராதிகா விட்ட சவாலில் பாக்யா ஜெயித்து விடுவார் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment