கேரளா ஸ்டைலில் சுடச் சுட நேந்திரம் பழம் அப்பம் போட்டு கணவருக்கு கொடுத்த நக்ஷத்திரா..!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை நட்சத்திரா தற்போது நடிப்பில் மட்டுமல்லாமல் சமையலிலும் ஒரு கலக்கி வருகிறார். youtube பக்கம் ஒன்றை தொடங்கியிருக்கும் அவர் கேரளாவில் பிரபலமாக இருக்கும் நேந்திரம் பழத்தை வைத்து அப்பம் சுட்டு அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். கேரளாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பழம்பொறி எனப்படும் அந்த உணவை தனது ரசிகர்களுக்காக செய்து காட்டி இருக்கிறார் நட்சத்திரா. தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நட்சத்திரா. கேரளாவைச் சேர்ந்த இவர் வெள்ளித்திரை சரியாக கொடுக்காததால் சின்னத்திரை பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார். இவர் ஜீ தொலைக்காட்சியில் முதன்முதலாக ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். கிராமத்து கதாநாயகியாக வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனங்களில் குறுகிய காலத்திலேயே நீங்காத இடத்தை பிடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேரளா ஸ்டைலில் சுடச் சுட நேந்திரம் பழம் அப்பம் போட்டு கணவருக்கு கொடுத்த நக்ஷத்திரா..! 1
தற்போது இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். யாரடி நீ மோகினி சீரியலுக்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த விஷ்வா என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோவிலில் வைத்த நடைபெற்ற இந்த திருமணத்திற்கு அவர் யாரையும் அழைக்கவில்லை. தனது தாத்தா உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருந்தார். திருமணம் ஆகி ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். சமீபத்தில் வீட்டிலேயே அவருக்கு எளிமையாக வளைகாப்பும் நடத்தியிருந்தனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நட்சத்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குறிப்பாக அவரது தோழிகள் ஸ்ரீநிதி, கயல் சீரியல் நடிகை சைத்ரா, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ஆகியோர் நட்சத்திராவுக்கு மிக நெருங்கிய தோழிகள் ஆவர். இவர்களுடன் அடிக்கடி ரீல்ஸ் செய்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நட்சத்திரா. இந்த நிலையில் தற்போது அவர் கேரளாவில் ஸ்பெஷலாக இருக்கும் நேந்திரம் பழத்தை கொண்டு பழம்பொறி எனப்படும் அப்பத்தை செய்து காட்டியிருக்கிறார். அந்த வீடியோவை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Nakshatra’s diary

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்