தனது மகளுக்கு ‘அன்னபிரசன்னம்’ நிகழ்ச்சி நடத்திய நடிகை நக்ஷத்திரா.! புகைப்படங்கள் இதோ.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் பிரபலம் நட்சத்திரா தற்போது தனது மகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டி அன்னபிரசன்னம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது மகளுக்கு 'அன்னபிரசன்னம்' நிகழ்ச்சி நடத்திய நடிகை நக்ஷத்திரா.! புகைப்படங்கள் இதோ.! 1

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை நட்சத்திரா. இவர் தமிழில் ‘கிடா பூசாரி மகுடி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். வெள்ளித் திரையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால், சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார்.

முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்கிற நாடகத்தில் ‘வெண்ணிலா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். கிராமத்து நடிகையாக, யதார்த்தமான நடிப்பும், முகபாவனைகளும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த சீரியலுக்குப் பின்னர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்குச் சென்ற அவர், ‘வள்ளி திருமணம்’ என்கிற தொடரில் நடித்து வந்தார். கலர்ஸ் தொலைக்காட்சி திடீரென அனைத்து சீரியல்களையும் முடித்து இருந்ததால், வள்ளி திருமணம் சீரியலும் முடிவுக்கு வந்திருந்தது.

இந்த நிலையில் நட்சத்திரா விற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆன நிலையில், சமீபத்தில் குழந்தையின் முகத்தை முதல் முறையாக காட்டி இருந்தார் நக்ஷத்திரா.

தற்போது குடும்பத்துடன் கேரளா சென்றுள்ள அவர் குழந்தைக்கு முதல் முறையாக சோறு ஊட்டும் நிகழ்வான அண்ணா பிரசன்னம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்