கல்யாணம் ஆன பிறகும் இவ கூடவே இருக்கனும்னு ஸ்ரீநிதி நினைக்கிறா..நட்சத்திரா கணவர் பேட்டி

வெளியிட்டது

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி பற்றி அவரது தோழி நட்சத்திரா மற்றும் அவரது கணவரும் மனம் திறந்து பல விஷயங்களை கூறியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர் நட்சத்திரா இவர் கேரளாவை சேர்ந்தவர் இவர் கிடா பூசாரி மகுடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார் பின்னர் திரைப்படங்களில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் தலை காட்டினார் சமீபத்தில் இவர் தனது காதலர் விஷ்வாவை கரம் பிடித்தார். இவர் திருமணம் பற்றி அவரது தோழி ஸ்ரீநிதி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. ஸ்ரீநிதியும் நட்சத்திராவும் மிக நெருங்கிய தோழிகள். கொரோனா காலத்தில் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தனர். பின்னர் நட்சத்திராவும், விஸ்வாவும் காதலித்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்யாணம் ஆன பிறகும் இவ கூடவே இருக்கனும்னு ஸ்ரீநிதி நினைக்கிறா..நட்சத்திரா கணவர் பேட்டி 1

இது ஸ்ரீநிதிக்கு பிடிக்கவில்லை. ஆனால் நட்சத்திராவுக்கு விஸ்வாவை அறிமுகப்படுத்தியதே ஸ்ரீநிதிதான். நட்சத்திராவுக்கும் விஸ்வாவுக்கும் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை கடுமையாக விமர்சித்தார் ஸ்ரீநிதி. நட்சத்திராவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர். நட்சத்திராவின் அக்கவுண்டில் பணம் இல்லை, வீட்டுச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர். என்னிடம் பேசக் கூடாது என்று மொபலை பிடுங்கி சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளனர், அதை தட்டிக் கேட்ட என்னை அடிக்கின்றனர் என்றெல்லாம் ஸ்ரீநிதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டை கூறினார். ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை, நான் சுதந்திரமாக தான் இருக்கிறேன் என்று ஒரே ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கமளித்து இருந்தார் நட்சத்திரா.

 

தனது தாத்தா உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவசர அவசரமாக திருமணம் நடந்துள்ளது. ஆனால் விஜே சித்ரா போல நான் இறந்துவிடுவேன் என்று ஸ்ரீநிதி பேசியது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீநிதி பேசியதில் 99% பொய்தான் இருந்தது என்று பேசினார். மேலும் நடு இரவில் கூட தனது வீட்டிற்கு வருவார். ஆனால் தனது கணவருடன் ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டார். என்னிடம் பேசிவிட்டு கணவரை நிராகரிப்பார் என்று நட்சத்திரா கூறினார். மேலும் அவர் கணவர் பேசுகையில், திருமணம் ஆன பின்பும் நட்சத்திரா அவர்களுடனேயே இருக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அவர்களின் முழு வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

 

YouTube Video Code Embed Credits: Indiaglitz Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்