தமிழ் திரை ரசிகர்களின் மிக பெரிய கனவு படமாக இப்பொது இருப்பது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஜெயகாந்தன் இளங்கோ குமரவேல் எழுத்தில், அமரர் கலக்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் “மெட்ராஸ் டாக்கிஸ்” மற்றும் “லைகா ப்ரோடுக்ஷன்ஸ்” சுபாஷ்கரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆதித்ய கரிகாலனாக “சீயான்” விக்ரம், அருள்மொழி வர்மனாக “ஜெயம்” ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டவனாக சரத்குமார், சின்ன பழுவேட்டவராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் என பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக செட் டிசைன், பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகள், குந்தவை – நந்தினியின் சந்திப்பு என டீசேரிலேயே சின்ன படம் ஒன்றை காட்டியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இந்த படம் ஏற்கனவே மணிரத்னம் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரையும் முன்னணியில் வைத்து எடுக்க திட்டமிட்டு பின்னர் கைவிட்டு போனது. இப்பொது வேறொரு நடிகர் பட்டாளத்தில் அதே போல பிரமாண்ட சிந்தனையுடன் படம் தயாராகியுள்ளது.
இந்த கதை 1950களிலேயே அமரர் கல்கி எழுதி வெளியாகியது. அப்போதே இதனை படமாக எடுக்க மிக பெரிய அளவில் முயற்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மக்கள் திலகம் எம்,ஜி.ஆர் எப்படியேனும் எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் முயற்சித்துள்ளார். இருப்பினும் அவருக்கு கைகூடாமல் பின்னர் நடிகர் கமல் முழு மூச்சில் இறங்கி அவரும் கைவிட்டார். இப்பொது படம் உருவாகியுள்ளது.
அந்த படத்தின் டீஸர் வெளியிட்டு விழா சென்னையிலுள்ள தனியார் அரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகை த்ரிஷா இயக்குனர் மணிரத்னம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரே சரியாக குர்தா மற்றும் வேஷ்டியை அணியாமல் பேண்ட் அணிந்து வந்தனர். இதனை இப்பொது சர்ச்சை கருத்தாகி வருகிறார் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
மிக பெரிய அளவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சுற்றி நிறைய நெகட்டிவிட்டிக்கள் உள்ளன. இப்பொது வெளியான அந்த படத்தின் ஜெயம் ரவியின் போஸ்டர் தான் மிகவும் பேசும் பொருளாகி உள்ளது. ஏனெனில் ஜெயம் ரவி நடிக்கும் பாத்திரம் அருள்மொழி வர்மன் கதாபாத்திரம். ஆனால் போஸ்டரில் அருண்மொழி வர்மன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலவாகையிலான விமர்சனங்களை பெற துவங்கின.
வெளிவரும் படங்கள் அனைத்திற்கும் எப்போதும் நெகட்டிவ் விமர்சங்கள் கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இது வரையில் இவரை ஒரு படம் கவர்ந்தது என்று இவரை தொடர்ந்து கவனித்து வரும் ரசிகர்களுக்கு கூட தெரியாது. சினிமாவை தாண்டி இவர் பொதுவெளியில் நடக்கும் சினிமா விஷயங்களையும் விமர்சித்து வருகிறார்.
இப்பொது மாறனும் தான் பங்கிற்கு இதனை குறித்து கேள்வி கேட்டுள்ளார். விக்கிபீடியா குறிப்பிட்டுள்ள தகவலின்படி பார்த்தால் ஜெயமோகனின் மனைவி பெயர் தான் அருண்மொழி நங்கை. பொன்னியின் செல்வன் எழுத்தாளர் கல்கிக்கான மரியாதையா அல்லது…? என குறிப்பிட்டுள்ளார். அதோடு, லட்சுமணசாமி ரங்கசாமி என்பவர், கல்கியை, அவரது பொன்னியின் செல்வனை திட்டி ஜெயேமாகன் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதியிருந்தார். இப்போது அவரது தளத்தில் அந்த கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பதிவையும் ப்ளுசட்டை மாறன் தனது ட்வீட்டில் இணைத்து பதிவிட்டுள்ளார்.
அருள்மொழியா? அருண்மொழியா? இப்படியெல்லாம் நேரம் வீணடிக்காதீர்:) இரண்டுமே, இலக்கணப்படிச் சரி!
*அருள்மொழி= இயல்புப் புணர்ச்சி
*அருண்மொழி= விகாரப் புணர்ச்சி
அருள்+மொழி= அருண்மொழி
நிலைமொழி ளகர ஈறு (அரு’ள்’)
வருமொழி மெல்லினத்தால் (‘மொ’ழி)
ள->ண ஆகும்
லள மெலி மேவின் னண-வும் (நன்னூல்) என பலர் விளக்கம் அளித்து ப்ளுசட்டை மாறனை திட்டி வருகின்றனர்.