நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது செல்வராகவனுடன் “நானே வருவேன்”, தெலுங்கில் “வாத்தி”, “திருச்சிற்றமபலம்”, ஹோலிவுட்டில் “தி கிரே மேன்” போன்ற படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்து இருக்கின்றன.

இப்போது இவர் இந்த உயரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவருடைய அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன். ஆரம்பகாலத்தில் அனைவரும் தனுஷை கேலி செய்த போது, அவரை வைத்து “காதல் கொண்டேன்” படத்தை எடுத்து தனுஷும் நன்றாக நடிப்பார் என ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினர். பின்னர் மாஸ் ஹீரோ ஹீரோவாக “புதுப்பேட்டை” மீண்டும் சிறப்பான நடிகராக “மயக்கம் என்ன” போன்ற படங்களில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார்.
ஒரு 5 ஆண்டுகள் முன்பு செல்வராகவன் படங்களுக்கு என தனியதொரு ரசிகர் கூட்டம் இருந்தன. இவர் இயக்கிய “7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, காதல் கொண்டேன்” போன்ற படங்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றன. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான தோல்வி அடைந்தாலும் இப்பொது அதனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் இரண்டு பாகம் எடுக்க சொல்லியும் தொடர்ந்து செல்வராகவனிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

நடுவில் “இரண்டாம் உலகம், என்.ஜி.கே. போன்ற படங்கள் தோல்வி அடைந்தாலும் இப்போது அவர் நீண்ட வருடங்கள் பிறகு தம்பி தனுஷுடன் சேர்ந்து இயக்கியுள்ள “நானே வருவேன்” படம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கு நடுவில் அவர் விஜயுடன் “பீஸ்ட்” படத்தில் நடித்திருந்தார். நல்ல விமர்சங்கள் பெற்றாலும் பெரிய வரவேற்பு ஒன்றும் இல்லை. அண்மையில் வெளியான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்த “சாணி காயிதம்” படம் பெரும் வரவேற்பை பெற்றதுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நீண்ட ஆண்டுகள் கழித்து இணைந்துள்ளதால் “நானே வருவேன்” படம் இப்பொது தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தியின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ஏதோ ஒரு தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் தனுஷின் “திருச்சிற்றமபலம்” படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் தனுஷ் செப்டம்பர் 30ஆம் தேதி “நானே வருவேன்” படத்தை ரிலீஸ்ஸிற்கு கொண்டு வரலாம் என சிந்தனையில் உள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. அதில் தான் இப்பொது மிக பெரிய சிக்கல் உள்ளது. நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள “பொன்னியின் செல்வன் 1” படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடந்தேறி வருகிறது.

இந்த மிக பெரிய படத்துடன் தனுஷின் “நானே வருவேன்” படம் வெளியானால் நஷ்டம் தனுஷ் படத்திற்கு தான். தனுஷ் பொன்னியின் செல்வன் நடிகர்கள் அனைவரையும் காட்டிலும் பெரிய மார்க்கெட் கொண்டிருந்தாலும், மணிரத்னம் படம் என்பதால் படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதில் தனுஷின் படம் நசுங்கி போக வாய்ப்பு உள்ளது. இதனால் விஷயம் தெரிந்த பலரும், இந்த செய்தியை கேட்டவுடன் தனுஷ் அந்த தவறான முடிவினை எடுக்க மாட்டார் என கூறி வருகிறார்கள். இன்னும் அதிகாரபூர்வமாக தேதி அறிவிக்கப்படாததால் அது மாற்றியமைக்க படும் என பலரும் கருத்துக்களை கூறு வருகிறார்கள்.