“என்னை உண்மையாகவே கடத்தினார்கள்”!! “பிதாமகன் சீன் போல நமிதாவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!!

வெளியிட்டது

இந்திய அழகி போட்டியில் பங்கெடுத்து 3வது இடம் பிடித்து, மிஸ் சூரத் என்னும் படத்தை தன்னுடைய 17வது வயதில் அடைந்தவர் நடிகை நமீதா. பின்னர் முமபையில் மாடல் அழகியாக தன்னுடைய மீடியா வாழ்வை துவங்கிய நமீதா அருண் ஐஸ்கிரீம், நில் ஹெர்பல் ஷாம்பு என பல விளம்பரங்களை நடித்தாலும் நினைத்த பாலிவுட் வாய்ப்பு வராததால் படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்த இவரை, தெலுங்கில் சொந்தம் என படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் அறிமுகமானாலும் தமிழில் முதல் படமாக நடித்த விஜயகாந்தின் “எங்கள் அண்ணா” படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற தமிழில் தொடர் வாய்ப்புகள் வர துவங்கின. video given below

"என்னை உண்மையாகவே கடத்தினார்கள்"!! "பிதாமகன் சீன் போல நமிதாவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!! 1
அப்போதைய முன்னணி நாயகர்கள் விஜயகாந்த், சரத்குமார், பார்த்திபன், சத்யராஜ் போன்றோர் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வர துவங்கின. நல்ல உயரமும், அழகும் கொண்டிருந்த நமீதா விரைவில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகியாக மாறினார். விஜய், அஜித் போன்ற இளம் கதாநாயகர்கள் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தன.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் முன்னணி நாயகர்கள் படங்கள் பலவும் இவர் நடித்தே வெளியாகின. கதையின் முதல் நாயகி இல்லை என்றாலும், படத்தின் முக்கிய ஈர்ப்பு இவராகவே இருந்ததால், தெலுங்கில் அடுத்தடுத்து நிறைய சம்பளத்திற்கு இவரை ஒப்பந்தம் ஆக்கினார் அங்கேயுள்ள தயாரிப்பாளர்கள்.  அதுமட்டுமின்றி ஒருசில கன்னட மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த “புலிமுருகன்” படத்திலும் நடித்திருந்தார்.

உடலெடை அதிகரித்தது காரணமாக படம் வாய்ப்புகள் இவருக்கு குறைய துவங்கின. 2010ஆம் ஆண்டுகளுக்கு பின் மெல்ல மெல்ல வாய்ப்புகள் இல்லாமல் போன இவர், ரசிகர்கள் மட்டும் நினைவில் கொண்டே இருந்தனர். அவ்வப்போது சில விளம்பரங்கள், ஷோக்கள் என ரசிகர்களுக்கு இன்றளவும் பரிட்சயப்பட்டு கொண்டே இருக்கிறார். பின்னர் சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சி, முதல் பிக் பாஸ் சீசன் என சிலவற்றில் பங்கெடுத்த இவர், 2017ஆம் ஆண்டு வீரேந்திர சவுதாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் முன்னர் அளித்த பேட்டி ஒன்று இப்பொது வைரலாகி வருகிறது. அதில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பிதாமகன்” படத்தில் நடிகை சிம்ரனை கடத்துவது போல ஒரு காட்சி இடம்பெறும். அதே போலவே 2010ஆம் ஆண்டு ரசிகர் ஒருவர் திருச்சி கடை திறப்பு விழாவிற்கு சென்ற இவரை ரசிகர் ஒருவர் விமானநிலையத்தில் இருந்து கடத்த முற்பட்டு பின்னர் போலீஸ் அவரை மடக்கி பிடித்துள்ளது. இந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது. அதை நீங்களும் காண…

Video Courtesy – ThanthiTV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்