தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘வீரா சூரா’ லிரிக் பாடல் வெளியாகியுள்ளது

தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் அடுத்து நடித்து இருக்கும் படம் தான் நானே வருவேன். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. வீரா சூரா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் திருச்சிற்றம்பலம்.இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. 100 கோடிக்கும் மேலாக வசூல் பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். நானே வருவேன் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வீரா சூரா' லிரிக் பாடல் வெளியாகியுள்ளது 1

விளம்பரம்

திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய வெற்றி பெற் நிலையில் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கள் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வீரா சூரா என்ற பாடல் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடையவை  "அஜித்தின் ஆட்டோகிராப்...நெகிழ்ந்த ரசிகர்...ரசிகரை குஷிப்படுத்திய அஜித்"

தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வீரா சூரா' லிரிக் பாடல் வெளியாகியுள்ளது 3

விளம்பரம்

இந்தப் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த கலைப்புலி தாணு பாடல் உங்கள் மனதை வருட இருக்கிறது என்று கூறியிருந்தார். அதே போல் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாட்டு மிகப் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த பாடலை காண.. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment