விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நடிகராக கலக்கி வந்த நாஞ்சில் விஜயனுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தியவர் நாஞ்சில் விஜயன். நாகர்கோவிலை சேர்ந்த இவர் மிமிக்ரி கலைஞராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு என்ட்ரி கொடுத்தார்.

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்.! 1

அது இது எது நிகழ்ச்சியில் பெரும்பாலும் பெண் வேடமிட்டு நடித்து வந்தார் நாஞ்சில் விஜயன். இது இவருக்கு மிகவும் பொருந்திப் போனது. மேலும் பெண் வேடமிட்டு தன் உடல் மொழியாலும் காமெடியான பேச்சுக்களாலும் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் நாஞ்சில் விஜயன். வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த போது அவரை விமர்சித்து வந்த சூர்யா தேவி என்ற பெண்ணுடன் இணைந்து வனிதாவை அவதூறாக பேசி வந்தார் நாஞ்சில் விஜயன். பின்னர் ஒரு கட்டத்தில் வனிதாவிற்கு ஆதரவாக மாற தொடங்கினார்.

இதனால் வனிதா, சூர்யா தேவி என்கிற பெண் மீது மட்டும் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் கடுப்பான சூர்யா தேவி ஆட்களை வைத்து நாஞ்சில் விஜயன் மீது தாக்குதல் நடத்தினார். ஆரம்பத்தில் வனிதாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நாஞ்சில் விஜயன் பின்னர் அவருடன் இணைந்து கொண்டு தமக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டு அவரை தாக்கியதாக கூறி இருந்தார் சூர்யா தேவி. தொடர்ந்து சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தது. பின்னர் அந்த விஷயம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.


தற்போது படங்களில் நடிப்பது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று பிசியாக இருந்து வருகிறார் நாஞ்சில் விஜயன். இதற்கிடையில் தற்போது அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். புகைப்படங்களை பகிர்ந்த அவர், “எனக்கான வாழ்க்கை துணை இவர்தான் என்று பெரியவர்களாலும் இறை அருளாலும் நிச்சயிக்கப்பட்டது* என்று சொல்லி பகிர்ந்து இருக்கிறார்.


ஆனால் அந்தப் பெண்ணின் முகத்தை மறைத்து விட்டு அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதனால் நாஞ்சில் விஜயனை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் யார் என்பது தெரியவில்லை. இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் நாஞ்சில் விஜயனின் உறவினர்கள், நண்பர்கள் ரோபோ சங்கர் மற்றும் குடும்பத்தினர் என்று பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருக்கின்றனர். விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்