‘குக் வித் கோமாளி சீசன் 5’ ஆரம்பித்த ஒரே வாரத்தில் விலகிய நபர்.! அவரே வெளியிட்ட அறிவிப்பு

வெளியிட்டது

‘குக் வித் கோமாளி’ சீசன் 5 தொடங்கி ஒரு வாரமே ஆன நிலையில் தற்போது அதிலிருந்து கோமாளி ஒருவர் விலகி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

'குக் வித் கோமாளி சீசன் 5' ஆரம்பித்த ஒரே வாரத்தில் விலகிய நபர்.! அவரே வெளியிட்ட அறிவிப்பு 1

நான்கு சீசன்களை ஒளிபரப்பி வந்த இந்த நிகழ்ச்சி, தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஐந்தாவது சீசன் தொடங்கும் முன்னரே நடுவராக இருந்த வெங்கடேஷ் பேக் வெளியேறி விட்டதாக அறிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவரைத் தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தயாரித்த ‘மீடியா மேசன்ஸ்’ என்கிற நிறுவனமும் விஜய் டிவியை விட்டு விலகி இருந்தது. அவர்கள் தற்போது சன் டிவியில் இணைந்துள்ளனர். அங்கு ‘டாப் குக்கு டூப்பு குக்கு’ என்கிற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

வெங்கடேஷ் பட்டுடன் இணைந்து ஜி.பி முத்து, அதிர்ச்சி அருண், மோனிஷா, தீபா சங்கர் போன்ற பலரும் சன் டிவியின் புது நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். எனவே பல புது கோமாளிகள் மற்றும் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜனை நடுவராக வைத்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 தொடங்கப்பட்டது.

இதில் புது கோமாளியாக வந்தவர் தான் நாஞ்சில் விஜயன். ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த இவர், சீசன் 5ல் கோமாளியாக வந்தார். ஒரே ஒரு எபிசோடு மட்டுமே வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்திருக்கிறார். அவர் பகிர்ந்த பதிவில், “எனக்கு விஜய் டிவியோடு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ள மாட்டேன். இத்தனை நாட்கள் சப்போர்ட் செய்ததற்கு நன்றி மக்களே” எனக் கூறியுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்