சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

விஜய் டிவியின் சின்னத்திரை நடிகராக வலம் வரும் நாஞ்சில் விஜயனுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! இதோ வீடியோ.! 1

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சென்னைக்கு வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இன்று குறிப்பிட தகுந்த நபராக உயர்ந்திருப்பவர் தான் நாஞ்சில் விஜயன்.

நாகர்கோயிலை சேர்ந்த இவர் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டில் காமெடியனாக அசத்தி வந்தார்.

பெரும்பாலும் இவர் பெண் வேடங்களையே அணிந்து வருவதால் இவரை பலரும் விமர்சித்து வந்தனர்.

இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாத இவர் அடுத்து கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பெண் வேடமிட்டு தன்னுடைய உடல் மொழியாலும் காமெடியான பேச்சுகளாலும் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார் நாஞ்சில் விஜயன்.

சமீப காலமாக வனிதாவின் மூன்றாவது திருமணத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சூர்யா தேவி என்பவருடன் சண்டையில் ஈடுபட்டு இருவருக்கும் கைகலப்பு வரை சென்றது.

தற்போது பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில் அவருக்கு அவரது குடும்ப நண்பரான மரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இந்த திருமணத்திற்கு ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் ரமேஷ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன் சின்னத்திரை பிரபலங்களாக இருக்கும் பலரும் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பலரும் நாஞ்சில் விஜயனுக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நீங்களும் நாஞ்சில் விஜயனின் திருமண வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!

Video Credits: Nanjil Vijayan

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்