தொடங்கியது பாரத் பந்த்

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும், பழைய ஊதிய பாக்கி தொகையை உடனடியாக வழங்ககோரியும் எதிர்க்கட்சிகள் சார்பில் தேசிய அளவில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் படி இன்று (ஜன.08) நாடு முழுவதும் சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடைபெற இருக்கின்றன. இதில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

விளம்பரம்
தொடங்கியது பாரத் பந்த் 1
ஒடிசாவில் நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டம்.

இந்திய தேசிய காங்கிரஸ் வர்த்தக சங்கம், அனைத்திந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் போன்ற எண்ணற்ற துறைகளை சார்ந்த அமைப்புகள் பங்கேற்கின்றன.

இதனை தொடர்ந்து இன்று தொடங்கிய வேலைநிறுத்தம் டெல்லி, மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் ரயில் மறிப்பு போராட்ட நடந்து வருகின்றது. அதேபோல், புதுசேரி மாநிலமும் முழுவதும் முடங்கியுள்ளது.

விளம்பரம்

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் பாதிக்கப்படும். இதனிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment