“அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீயில்லாமல் நானில்லையே”!! சூர்ய உதயத்துடன் ஹனிமூனை கொண்டாடும் நயன் விக்கி!! வைரல் வீடியோ

வெளியிட்டது

"அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீயில்லாமல் நானில்லையே"!! சூர்ய உதயத்துடன் ஹனிமூனை கொண்டாடும் நயன் விக்கி!! வைரல் வீடியோ 1

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் இவர்களது திருமணம் சுற்றம் மற்றும் நட்பு, திரையுலக பிரபலங்கள் சூழ மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் நடைபெற்று வருகிறது. வீடியோ  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருமணத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் கலந்து கொள்ளும் விஐபிக்களுக்கும் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேலும் ரெசார்ட்டின் வெளியில் பயங்கரமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருமணத்திற்கு அழகான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காஸ்ட்யூம் மற்றும் உடைகள் போன்றவை எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தத்தில் நீண்ட காலங்கள் கழித்து நடைபெறும் இந்தத் திருமணம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே ட்விட்டரிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளனர். ரசிகர்கள் அவர்களை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வைத்து வருகின்றனர். கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாரின் திருமணம் என்றால் சும்மாவா, அதகளம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்தை நேரில் காண முடியவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு இருந்தாலும் இவர்களது திருமணம் வீடியோ பதிவு செய்யப்பட்டு நெட்பிளிக்சில் சில தினங்களில் வெளியாக உள்ளது என்பது அவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இதில்கூட பணத்தை பார்த்துள்ளார்கள் என்ற விமர்சனம் எழுந்தபோதிலும், சாதாரண ரசிகனும் தனக்கு விருப்பமான நயன்தாராவின் திருமணத்தை பார்க்க முடியும் என்பதால் இதை வரவேற்கலாம்.

இதனிடையே, அடுத்த கேள்வி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஹனிமூன் செல்லப் போவதில்லை என்ற தகவல் வெளியானது. நயன்தாராவிற்கு சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளதால் அடுத்ததாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்பொது திருமணம் முடிந்த பின் இருவரும் கணவன் மனைவியாக இருக்கும் தங்களுடைய புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இருவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் என பதிவிடுவருகிறார்கள். வைரலாகி வரும் அந்த புகைப்படம் நீங்களும் காண…

திருமணம் முடிந்த பின் திருப்பதிக்கு கோவிலுக்கு சென்ற நயன் மற்றும் விக்கி செருப்பு போட்டுகொண்டு நடந்ததாக சில பிரெச்சனைகளில் மாட்டிக் கொண்டனர். திருமண முடிந்து 10 நாட்கள் மேல் ஆகியுள்ள நிலையில் இருவரும் தேன்நிலவிற்கு தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை இப்பொது இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் அது மிகவும் வைரலாகி வருகிறது.

Video Courtesy – Vmakers

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்