Categories: சினிமா

நயன்தாரா நடிக்கும் 75வது படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு.! என்னனு தெரியுமா?

வெளியிட்டது

நடிகை நயன்தாரா நடித்து வரும் 75வது திரைப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் ஒன்றை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மனசினக்ககரே’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. பின்னர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருந்தார். இவர் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தற்போது கைவசம் இறைவன், டெஸ்ட் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பெயரிடப்படாத தனது 75வது படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

நயன்தாரா நடிக்கும் 75வது படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு.! என்னனு தெரியுமா? 1

 

கடந்த மார்ச் மாதம் பட பூஜை தொடங்கிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். இது குறித்த அறிவிப்பை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவியாளர்களில் ஒருவராக இருந்த நீல் கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். நயன்தாராவுடன் இணைந்து நடிகர் ஜெய், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆனாலும் நயன்தாரா தனது சோலோ ஹீரோயினாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் தொழில்நுட்ப பணிகளுடன் டப்பிங் உட்பட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து இந்த ஆண்டிற்குள் படத்தை முடித்து விட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்